குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கம்:பெற்றோர்களுக்கு முதல்வர் அறிவுரை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கம்:பெற்றோர்களுக்கு முதல்வர் அறிவுரை

பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கம்: பெற்றோர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட உலக சிக்கன நாள் செய்தியில் கூறியிருப்பதாவது: மக்களிடையே சிக்கன உணர்வை ஏற்படுத்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.'இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு' என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த தொகைக்கு உத்தரவாதமும் எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.'சிறுகக் கட்டி பெருக வாழ்' என்பதை உணர்ந்து தமிழக மக்கள் அனைவரும் தங்கள்வாழ்வு நலம்பெற அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here