ஏழாவது ஊதிய ஆணையம் :15%உயர்வுக்கு பரிந்துரை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஏழாவது ஊதிய ஆணையம் :15%உயர்வுக்கு பரிந்துரை!


மத்திய அரசு அமைத்துள்ள ஏழாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 15 சத உயர்வு மட்டுமே இருக்கும் என தெரிகிறது. மத்திய அரசு மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஏழாவது ஊதிய ஆணையம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது. சுமார் 900 பக்கங்கள் கொண்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வருகிற 20 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சரிடம் வழங்கப்படும் என தெரிகிறது. பின்னர் அது மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்படும். ஏழாவது ஊதிய உயர்வு பரிந்துரையின்படி, வருகிற 2016 ஜனவரி முதல் 15 சதம் அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது. இதனால் அரசுக்கு ரூ. 25,000 கோடி வரை கூடுதல் செலவாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆறாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது 35 சத உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரவிருக்கும் 15 சத உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் எவ்வித மகிழ்ச்சியையும் ஏற்படுத்தாது என தெரிகிறது. எனினும், இந்த ஊதிய உயர்வு அமலப்டுத்தப்பட்டால் வீடு, கார் உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகமாகும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here