வரும் முன் காப்போம்... 6வது ஊதியக்குழுவின் பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில் மேலும் ஒரு இடி விழுந்து இருக்கிறது..நமக்கு...இதை கவனமாக ஜாக்டோ எதிர்நோக்கவேண்டும் ..இதிலும் நாம் ஏமாறவேண்டாம். .நிதியரசர் திருவாளர் மாத்தூர் இழைத்திட்ட அநீதி! பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப் படும் ஊதிய உயர்வில் பட்டை நாமம்! மகிழ்ச்சியில் நிதியமைச்சகம்! அள்ளிக் கொடுத்து விட்டதாக பறை சாற்றும் ஊடகங்கள்! உண்மையில் என்ன கிடைக்க போகிறது - ஓர் அலசல்:
* கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற பஞ்சப்படி 119%. அதாவது, சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு DA மூலம் கிடைத்திட்டஊதிய உயர்வு 11.9%. அடுத்த ஊதியக் குழு வரையிலும், சுமாராக 10 ஆண்டுகளுக்கு மாதர் நமக்கு வழங்கியஊதிய உயர்வு 14.77%. இது BONANZA வாம் ஊடகங்களுக்கு...
* துவக்க நிலை ஊதியம் தற்போது Rs.7000/- இது ரூ.18,000 என பரிந்துரைப்பு. இது தற்போதைய ஊதியத்திலிருந்து 2.51 மடங்கு உயர்வு. ஆயின், உச்சகட்ட நிலை ஊதியம் தற்போதைய ரூ.80,000 லிருந்துரூ.2,25,000 ஆக உயர்வு. இது 2.82 மடங்கு உயர்வாகும். ஒரு கண்ணில் வெண்ணை...மறு கண்ணில்....
* 6வது ஊதியக் குழு கொடுத்த பிட்மன் பார்முலா 2.85% ஆகும். தற்போது வெறும் 2.57%தான். இதிலும்வேட்டு.
* ஆண்டு உயர்வு - இன்க்ரிமென்ட் - அதே 3%.
* HRA 10%, 20%, 30% என்ற நிலையிலிருந்து 8%, 16%, 24% ஆகக் குறைப்பு. குறைப்பு எப்படி உயர்வாகும்எனக் கேட்கக் கூடாது..நிதியமைச்சகம் கோபித்துக் கொள்ளும்.
* GRADE PAY ஒழிக்கப் பட்டது. ஆனால், PAY MATRIX என்று வந்துள்ளது. புதிய புதிய சொற்றொடர்கள் சொல்லி நாமம்போடும் வித்தையில் திரு. மாத்துரும் சளைத்தவர் அல்ல.
* CYCLE /TREASURY /CASH HANDLING/WASHING அல்லவன்ஸ்கள் ஒழிப்பு. 6 வது ஊதியக் குழுவின்முரண்பாடுகள் [ANOMALIES] ஒழிக்கப்பட்டதாக தம்பட்டம். ஆம். CASHIER மற்றும் TREASURY அலவன்ஸ் இடையிலான முரண்பாட்டை நீக்கச் சொன்னால் TREASURY அலவன்சையே நீக்கிய தயாள குணம்.,
* பணித் திறன் அடிப்படையில் எதிர்காலத்தில் INCREMENT வழங்கிட பரிந்துரை. இது அதிகாரிகள் கையில் ஊழியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கொடுக்கப் பட்ட பட்டாக் கத்தி.
* நிலுவைத் தொகை [ARREARS] கிடைக்காது.
* அனைத்து முன்பணம் [ADVANCES] FLOOD அட்வான்ஸ், சைக்கிள் அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், விழாக்கால [FESTIVAL] அட்வான்ஸ் போன்ற அனைத்து முன்பண வசதியும் கிடையாது. இன்னும் பல அநீதிகள் இழைக்கப் பட்டுள்ளன. பட்டியல் மிக நீளம். எனவே, தற்போது கிடைக்கப் பெறும் இந்த ஊதியஉயர்வு அடுத்த ஊதியக் குழு வரையில், அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்கு என்று பொருளாகிறது. அடுத்த ஊதியக்குழு அமைக்கப் படுமா என்பதே கேள்விக் குறி என்பதையும் மறக்கலாகாது.
நாட்டின் நிதிச் சுமையைச் சுட்டிக் காட்டி, நீதியரசரின் கைகளைக் கட்டிப் போட்ட நிதியமைச்சரும் ஆளும்வர்கத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் நிச்சயம் இருப்பார்கள். "கொடுத்த காசை விட அதிகமாக கூவிய" குழுவின் மீது வாஞ்சையுடன் இருப்பார்கள். நமது GDS ஊழியருக்கோ இப்போதுதான் ஓர் அதிகாரியின் தலைமையில் கமிட்டி போடப் பட்டுள்ளது.
நமது கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டுள்ளது. இப்பின்னணியில், வருகின்ற டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தத்தை முழுமையாக நடத்திடுவதும், ஒரு பரந்து பட்ட மத்தியஅரசு ஊழியரின் ஒற்றுமையைக் கட்டி காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை திட்டமிடுவதும் மட்டுமே நமக்குஇழைக்கப் பட்ட அநீதியினைக் களைய உதவும். அத்திசை வழி பயணிக்க சூளுரைப்போம்! ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக