பிரதமர் மோடியின் தங்கத் திட்டங்கள் யாருக்கு லாபம்? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிரதமர் மோடியின் தங்கத் திட்டங்கள் யாருக்கு லாபம்?

பிரதமர் மோடியின் தங்கத் திட்டங்கள்...யாருக்கு லாபம்?

மான் கீ பாத்...

நமது பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு அகில இந்திய வானொலி மூலம் பதில் அளிக்கும் நிகழ்ச்சியின் பெயர் இது. அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முக்கியமானதொரு கருத்தைச் சொன்னார். ‘ ‘கோல்டு டெபாசிட் மற்றும் கோல்டு காயின் திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறோம். நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் தங்கம் என்பது பிரிக்க முடியாதபடிக்கு இரண்டற கலந்துவிட்டது. நெருக்கடி யான நேரங்களில் சாதாரண மக்களுக்கு தங்கம்தான் மிகப் பெரிய பொருளாதார பலமாக இருக்கிறது. தங்கத்தில் பணத்தைப் போட்டுவிட்டு அதை வெறுமனே வைத்திருப்பது இந்தக் காலத்துக்கு சரியாக வராது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தியாக தங்கமானது மாற்றப்பட வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி இப்படி பேசியதைத் தொடர்ந்து, இனி தங்கத்தை நகைகளாக வாங்குவதைவிட, கோல்டு பாண்டுகளாக வும், காயின்களாகவும் வாங்கினால் என்ன என்கிற கேள்வி மக்களிடம் பிறந்துள்ளது. http://sivakasiteacherkaruppasamy.blogspot.com பிரதமர் மோடி அறிவித் திருக்கும் இந்த தங்கத் திட்டங்கள் எப்படிப்பட்டவை, இவற்றின் முக்கிய அம்சங்கள் என்ன, இந்தத் திட்டத்தினால் என்ன நன்மை, யாருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது முக்கியமான கேள்வி. இந்த கேள்விகளுக்கான விளக்கமான பதில் இதோ... கோல்டு பாண்டு ஸ்கீம்! மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் வாங்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இருக்காது. ஆண்டுக்கு 300 டன் அளவுக்கு வாங்கப்படும் தங்கத்துக்கான பணம் மிச்சமாகும். இதனால் தங்கம் இறக்குமதி குறைவதால் ரூபாய் மதிப்பு ஓரளவு குறையாமல் தடுக்கப்படும். இந்த நவம்பர் 5 முதல் 20 வரை இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். தங்கம் வாங்க விரும்புகிறவர்கள் இந்த திட்டத்தில் 2, 5, 10, 50 மற்றும் 100 கிராம் அளவு யூனிட்டுகளாக தங்கத்தை பாண்டாக வாங்க முடியும். இந்த பாண்டின் முதிர்வு காலம் 8 வருடம் ஆகும். ஆனால், 5 வருடங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறலாம். இதை வங்கியில் அடமானம் வைக்கலாம்.

இந்த பாண்டுகள் நிதிச் சந்தைகளில் வர்த்தகமாகும் என்பதால் இவற்றை ஒருவர் முதிர்வு காலத்துக்கு முன்பே விற்க முடியும். இந்த பாண்டுகள் வங்கி, வங்கி அல்லாத நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு நபர் 500 கிராம் தங்கம்தான் வாங்க முடியும். இந்த பாண்டினை இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே வாங்க முடியும்.

வட்டி விகிதம்!

இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாண்டுகளுக்கு 2.75% வட்டி உண்டு. இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். பாண்டு வாங்கும்போது இருக்கும் தங்கத்தின் விலைக்குத்தான் வட்டி கிடைக்கும். கோல்டு பாண்டுகள் காகித வடிவம் மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எந்த வடிவத்தில் வாங்கி வைத்துக்கொள்ள விரும்புகிறார்களோ, அந்த வடிவத்தில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், கேஒய்சி விதிமுறைகள் பின்பற்றப்படும். இந்த பாண்டுகளை அடமானம் வைத்து கடன் வாங்கலாம். தங்க நகை கடனுக்கு ஆர்பிஐ விதித்துள்ள நடைமுறைகள் இதற்கும் பொருந்தும். அதேபோல் தங்கத்துக்கு உள்ள மூலதன ஆதாய வரி விதிப்பும் வட்டிக்கு வரி விதிப்பும் உண்டு. http://tamilnumaralogy.blogspot.com. இந்தத் திட்டத்தின் முடிவில் பணமாக மட்டும்தான் பெற முடியும்; தங்கம் தரப்பட மாட்டாது. முதிர்வுத் தொகையானது அன்றைய தங்கத்தின் விலை அளவில் இருக்கும். முதிர்வுத் தொகையானது எதிர்பாராதவிதமாக வாங்கிய விலையைவிட குறைவாக இருந்தால், முதலீட்டை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடரலாம். இந்தத் திட்டத்தில் லாபமோ, நஷ்டமோ முதலீட்டாளர்களையே சாரும்.

கோல்டு காயின்!

மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வருகிற தீபாவளியின்போது வெளியிடப்படும் என்றும் சொல்லி இருக்கிறார். ‘‘எத்தனை நாளைக்குத்தான் நாம் வெளிநாட்டினர் தயாரித்த தங்க நாணயங்களை பயன்படுத்துவோம்? உள்நாட்டிலேயே நாம் ஏன் தங்க நாணயங்களை தயாரிக்கக் கூடாது? எனவேதான், வருகிற தாந்தராஸ் முன்பே இந்த தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தப் போகிறோம்’’ என்று சொல்லி இருக்கிறார். தங்க நாணயம் என்பது புதிய விஷயம் கிடையாது. சில ஆண்டு களுக்குமுன், வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் தங்க நாணயங்கள் மற்றும் பார்களை விற்பனை செய்தன. இதன் விலை நகைக்கடை விலையைவிட அதிகமாக இருந்தது. ஆனால், அந்த காயின்/ பார்களை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்ளாததால், கடைகளில் விற்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் கடைகள் விலையைக் குறைத்துக் கேட்கும் நிலை உருவானது. மேலும், அவற்றை அடமானம் வைப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தது. அவசரத் தேவைக்கு அவற்றை விற்க நினைத்தவர்கள் நஷ்டத்துக்கு விற்பனை செய்தார்கள். அதன்பின்பு ஒருகட்டத்தில் காயின் / பார் விற்பனையை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் நிறுத்தியது. இப்போது மீண்டும் அரசாங்கமே தங்க நாணயங்களை விற்க முடிவு செய்திருக்கிறது. தங்க நாணயங்கள் விஷயத்தில் கடந்த முறை இருந்த சிக்கல்கள் இந்த முறையாவது இல்லாமல் இருந்தால் நல்லது. சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைகள் தங்க நாணயங்களை விற்பனை செய்தன. அதற்கு தடை விதித்தது அப்போதிருந்த அரசு. இப்போது மீண்டும் அரசே தங்க நாணயங்கள் விற்க முடிவு செய்திருக்கிறது. இது எந்த வகையில் சரி என கேள்வி எழுப்புகிறார் கோவை நகைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம். ‘‘இப்போது கோல்டு காயின்களை எம்எம்டிசி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம். http://sivakasipeople.blogspot.com பிரதமர் கூறியது போல, தங்க காயின்கள் விற்பனை செய்வதனால், எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. ஏனெனில் எம்எம்டிசி நிறுவனம் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுதான் காயின்களை தயாரிக்கிறது. எனவே, காயின் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் நம் நாட்டுக்கு கிடைக்குமா என்பது கேள்வியே. இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. மேலும், தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களின் வேலைவாய்ப்பு வெகுவாக குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, காயின்கள் அதிகமாக கிடைக்கவில்லை என்பதால், பொதுமக்கள் ஆபரணங்களை முதலீடு நோக்கில் வாங்கி வைத்தார்கள். இப்போது அரசே காயின் விற்கும்போது அதிகமான மக்கள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் நகைக் கடைகளில் 10-15% விற்பனை குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கம் இந்தப்http://sivakai.blogspot.blogspot.com  பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்களைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார். மத்திய அரசு கொண்டுவரும் இந்தத் திட்டங்களினால் நகைக்கடைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என கோல்டு ஜூவல்லரியின் இயக்குநர் பவேஷிடம் கேட்டோம். “அரசின் இந்தத் திட்டங்களினால் நகைக்கடைகளில் தங்க நகை விற்பனை யில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அரசின் திட்டங்களில் முதலீடு மட்டும்தான் செய்ய முடியும். ஆனால், நகை வாங்க வேண்டுமெனில் கடைகளுக்குத்தான் வரவேண்டி இருக்கும். எனவே, எங்கள் விற்பனை எப்போதுமே குறையாது” என்றார். ஆக மொத்தத்தில், அரசு தங்களுடைய நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கு தங்க பாண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தங்கத்தை கோல்டு பாண்டாகவோ, கோல்டு காயினாகவோ வாங்கினாலும் சிறிது லாபம் மட்டுமே கிடைக்கும். கடந்த 15 வருடங்களில் தங்கத்தை விட பங்குச் சந்தை இரு மடங்கு வருமானம் தந்துள்ளது. நம் சொந்தத் தேவைக்காக தங்கத்தை நகைகளாக வாங்கிய பின், மிச்சமுள்ள நம் சேமிப்பை நிதி சார்ந்்த முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

எனவே, தங்க முதலீட்டில் நாட்டம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பாண்ட் திட்டத்தை பரிசீலிக்கலா மக்களுக்கு லாபமா?

வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.

“பெரும்பாலானவர்கள் தங்கம் வாங்குவதை முதலீடாகவே பார்ப்பதால் கோல்டு பாண்டு திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், டீமேட் மற்றும் காகிதம் என இரண்டு வடிவங்களிலும் கிடைக்கும்போது மக்களால் அதை எளிதாக வாங்க முடியும. இதுவரை முதலீட்டாளர்களுக்கு கோல்டு இடிஎஃப் திட்டம் டீமேட் வடிவில் மட்டும்தான் கிடைத்தது. இதனால் படிக்காத மற்றும் ஆன்லைனில் அதிக பழக்கம் இல்லாதவர்கள் வாங்குவதில் சிக்கல் இருந்தது. ஆனால், அரசின் இந்த கோல்டு பாண்ட் திட்டத்தில் அந்த சிக்கல் இல்லை. மேலும், கோல்டு இடிஎஃப் திட்டத்தில் வாங்கப்படும் யூனிட்டுகளின் விலையில் தங்கத்தின் விலை மட்டும்தான் பிரதிபலிக்கும். அதுதவிர வேறு எந்தவிதமான கூடுதல் சலுகையும் கிடையாது. ஆனால், கோல்டு பாண்ட் திட்டத்தில் தங்கத்தின் விலை மட்டும் இல்லாமல் கூடுதலாக 2.75 % வட்டியும் கிடைக்கும். மேலும், இடிஎஃப் திட்டங்கள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுபவை. கோல்டு பாண்ட் திட்டம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திட்டம் என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கும்.
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here