சுற்றுச் சூழல் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள உலக நகரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், முதல் 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பிடிக்கின்றன.
கொச்சி விமான நிலையத்தின் மீது சூரிய சக்தித் தகடுகள் வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயு ஒரு முக்கியக் காரணியாக கூறப்பட்டாலும், மின் உற்பத்திக்காக நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாடு அதைவிட மிகப்பெரிய அளவில் குறிப்பிடத்தக்க ஒரு காரணியாகவே உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது. உலகளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது எனும் குற்றசாட்டுக்கள் மேலோங்கி வரும் வேளையில், அந்த அவப்பெயரை கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரம் ஓரளவுக்கு சரி செய்துள்ளது என்று கூற வேண்டும். காரணம், சூரிய சக்தியில் முற்று முழுதாக இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் , இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பெரிய செலவினத்தை ஏற்படுத்தும் மின் கட்டணத்தை தவிர்ப்பதற்காக, 46,000 க்கும் அதிகமான சோலார் தகடுகளை கொண்டு விமான நிலையத்துக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய சக்தியிலிருந்து உருவாக்கப்படும் மின்சக்தி, 24 மணி நேரத்திற்கும் போதுமானது எனவேதான் தாம் 12 மெகாவாட் கொண்ட மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையத்தை உருவாக்கியதாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் ஜோஸ் தோமஸ், கூறினார். பகலில் 6- 7 மணி நேரத்தில் சூரிய சக்தியிலிருந்து உருவாக்கப்படும் மின்சக்தி ஒரு முழு நாளுக்கும் தேவையான மின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் ஜோஸ் தோமஸ் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக