பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் உயருமா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் உயருமா?

ஊதிய உயர்வு :

தமிழகத்தில் அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ன் படி 16549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பின்னர் நிரந்தர ஊழியர்களுக்கு பலமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், ரூபாய் 7000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டது. தற்பொழுது அகவிலைப்படி உயர்வு சதவிகிதம் 100% ஐயும் தாண்டி 119% ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போதெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனே அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு அறிவித்து வருகிறது. ஆனால் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு இதற்கு இணையான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வழங்கப்படவில்லை. மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் என்ற பெயரில், மாணவர்களின் எண்ணிக்கையை காரணங்காட்டி, தொலைத்தூரங்களில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100 கி.மீ க்கும் அதிகமாக பிரயாணம் செய்யும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவர்களின் ஊதியம் பயணத்திற்கு செலவிடவே போதவில்லை. பயண நேரம், செலவுத் தொகை இவைகளை கருத்தில் கொண்டு பார்த்தால் முழுநேர ஊழியராக்கி, முழு ஊதியம் வழங்கினால் மட்டுமே பணியை சிறப்பாக செய்ய முடியும்.

பணியில் சிக்கல் :

1. கோடைக்காலம், காலாண்டு, மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களின் நலன் கருதி இலவசத் திட்டங்களுக்காக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஆனால் இக்காலங்களில் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

2. பகுதிநேர கணினி பயிற்றுநர்கள், தங்கள் துறை சார்ந்த பல பணிகளில், பகுதிநேரம் தவிர அதிக நேரம் ஈடுபடுவது தவிர்க்க இயலாததாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here