தொடர் மறியல் போராட்டம் ஜாக்டோ முடிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தொடர் மறியல் போராட்டம் ஜாக்டோ முடிவு

சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறி மறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டம், மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வரும், 16ல் அமைச்சர், செயலர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும். டிச., 5, 6ல் மாவட்ட அளவில் மாநாடு; டிச., 12, 13ல் வட்டார அளவில் ஆயத்த மாநாடு; டிச., 28, 29, 30ம் தேதிகளில், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், தடையை மீறி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலருமான சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, ஜாக்டோ கூட்டுக்குழுவின் போராட்டம் தொடரும். மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டால், சிறை செல்லவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here