சிவகாசியில் தீபாவளி கொண்டாடும் பட்டாசுத்தொழிலாளர் - ஒரு பார்வை
தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் மக்கள் அதனை தயாரிக்கும் மக்களின் நிலையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்திருந்தாலும் நினைக்க நேரமில்லை.பட்டாசுத்தொழிலாளர்கள் பல உயிர்களை இழந்து உலக மக்களுக்காக பட்டாசு தயாரிக்கிறார்கள்.தங்கள் குடும்பத்தில் ஒரு http://sivakasiteacherkaruppasamy.blogspot.com
சிலரை இழந்து அவர்களை நினைத்து கண்ணீருடன் கொண்டாடுபவர்கள் பலர். சொந்த ஊரில் இருந்தால் இழந்தவர்கள் ஞாபகம் வரும் என்று வெளியூர் சென்று தீபாவளியை சிலர் கொண்டாடவர்.ஆண்டு முழுவதும் உழைத்து முதலாளிகள் கொடுக்கும் டிப்ஸை(போனஸ்) வாங்கி போலியாக தீபாவளி பலர் கொண்டாடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் முதலிபட்டி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு பின் தொழிலாளர்களுக்கு எந்த விதமான சம்பளம் உயர்வும் இல்லை போனஸ் வழங்குவதிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள்.சிறு பட்டாசு ஆலைகள் கூட தொழிலாளர்களுக்கு சாதகமான சம்பளம் போனஸ் வழங்கும் நிலையில் கார்ப்பரேட் மனப்பான்மையில் செயல்படும் பெரிய கம்பெனிகள் கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றன.பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் சிறிய மற்றும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளை நசுக்கும் மனப்பான்மையில் செயல்படுகின்றன.பெரிய தொழிற்சாலை முதலாளிகள் சீனா போன்ற நாடுகளில் தொழிற்சாலை இருப்பதாக கூறிக்கொண்டு பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றன.பட்டாசுகளை விற்பனை செய்வதிலும் இனம் மொழி பார்த்து ஆர்டர் கொடுக்கின்றனர்.குறிப்பிட்ட இனம் சார்ந்த குழுக்கள் அமைத்து அவர்களுக்கே ஆர்டர் வழங்குகின்றனர்.இதனால் சிறிய. கம்பெனி தொழிலாளி பாதிக்கப்படுகின்றனர்.சிவகாசியில் 680 பட்டாசு ஆலைகள் உள்ளன அவற்றுள் பெரும் முதலாளிகளிடம் 250 ஆலைகளஉள்ளன.ஆனால் சிறிய ஆலைகள் அனைத்தும் பெரிய ஆலைகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வெண்டிய சூழல் .Standard,காளிஸ்வரி சோனி சுப்ரிம் காரனேசன் கிருஷ்னா எ ஆர் டி ம்போ கேஆர்எஸ் அணில் போன்ற ஆலைகள் கட்டுப்பாட்டில் மற்ற ஆலைகள் உள்ளன.சிலர் CITU போன்ற சங்கங்களில் இணைந்து போராடி சம்பள உயர்வு பெற்றாலும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களையே வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர் பெரிய கம்பெனிகள்.பள்ளி செல்லும் குழந்தைகளும் விடுமுறையில் வேலைக்கு சென்று சிலர் பட்டம் பெற்றும் சிலர் பட்டம் பெறாமலும் பட்டாசு ஆலைக்கே வருகின்றனர்.சில பெற்றோர் தங்களை பட்டாசு http://sivakasipeople.blogspot.com அதிபர்களிடம் அடமானமாக வைத்து குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.பின்பு அதே ஆலைக்கு உரிமையோடு வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.ஆதலால் தாங்கள் வாங்கும் பட்டாசு கடைக்காரரிடம் இந்த பட்டாசை தயாரித்த தொழிலாளிக்கு முறையான ஊதியம் போனஸ் வழங்கப்பட்டதா என்றும் குழந்தை தொழிலாளர் தயாரிக்காத வெடியா என கேட்டு வாங்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக