ஃபைனான்ஷியல் டயட்.....கடன் நோயிலிருந்து விடுதலை! ! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஃபைனான்ஷியல் டயட்.....கடன் நோயிலிருந்து விடுதலை! !

அந்தத் தனியார் அலுவலகத்தில் கிஷோர் புத்திசாலி இளைஞன். எந்த விஷயத்தைச் சொன்னாலும் சட்டென புரிந்து கொண்டு, அந்த வேலையைச் செய்வதில் திறமைசாலி. ஆனால், அவனிடம் இருக்கும் பெரிய பிரச்னையே, அடிக்கடி அலுவலகத்துக்கு வராமல் விடுமுறை சொல்லிவிடுவதுதான். காரணம், கடந்த சில ஆண்டுகளாகவே அவனது உடல்நலம் தொடர்ந்து சரியில்லாமல் இருப்பதே. தினமும் ஒன்றரை பாக்கெட் சிகரெட் புகைப்பதால், அவனது உடல்நலம் கெட்டிருந்தது. தவிர, மதுப் பழக்கம் வேறு, உடலை மேலும் பாழ்ப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு மட்டுமே ஒரு மாதத்துக்கு 3,000 செலவானது. இதனால் அவனது கடன் அதிகரித்து, அவனது நிதி நலமும் மோசமாக, இன்றைக்கு அவனது வேலை தொடர்ந்து நீடிக்குமா என்கிற நிலை உருவாகி விட்டது. இந்த கிஷோர் அளவுக்கு நம் நிலைமை மோசமில்லை என்றாலும், நம்மில் பலருக்கும் உடல்நலம் மற்றும் நிதி நலம் தொடர்பான பிரச்னைகள் வந்து பாடாய்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. நமது உடல்நலத்தைக் காக்க நாம் உணவு விஷயத்தில் ‘டயட்’ இருக்கிற மாதிரி கடன் நோயிலிருந்து விடுதலை பெற சில கட்டுப்பாடுகளை பின்பற்றியாக வேண்டியிருக்கிறது. கடன் நோயிலிருந்து விடுபட நாம் பின்பற்ற வேண்டிய ஃபைனான்ஷியல் டயட்டுகள் என்னென்ன? கடன் குறைவாக இருக்கட்டும்! உடல்நலத்தைக் காக்க தேவையில்லாத உணவுப் பண்டங்களைத் தவிர்த்து, நல்ல உணவு வகைகளை உட்கொள்வது போல, தேவையில்லாத கடன்களைத் தவிர்த்து அவசியமான கடனை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அவசியம் என்கிறபோதுகூட வட்டி குறைவான, அதேசமயத்தில் வருமான வரி விலக்கு தரக்கூடிய கடன்களை மட்டும் வாங்கிப் பயன்படுத்தலாம். இதனால் நம் கடனானது ஓர் அளவுக்குள் ஆரோக்கிய மாக இருக்கும். டயட் இருக்கப் பட்டியலிடுங்கள்! டயட் இருக்க நினைப்பவர்கள் செய்யும் முதல் காரியம் எதுவாக இருக்கும்? அன்றுவரை சாப்பிட்டு வந்த உணவுகளை ஒரு தாளில் எழுதி, அதில் நல்ல உணவு வகைகள் எது, உடல்நலத்தை அதிகம் பாதிக்கக்கூடிய கெட்ட உணவு எது என்பதைப் பட்டியலிடுவதுதானே! அதுபோலத்தான் கடன் பிரச்னையில் இருந்து வெளியே வர நினைப்பவர்களும் ஒரு தாளில் தான் வைத்திருக்கும் கடன்களையும், அதில் எதற்கெல்லாம் அதிக வட்டி இருக்கிறது, எந்தக் கடனுக் கெல்லாம் வரிவிலக்குக் கிடைக்கிறது போன்ற விவரங்களை எழுதிவைத்து அதிகநாள் வைத்துக் கொள்ள வேண்டிய கடன் எது, விரைந்து முடிக்க வேண்டிய கடன் எது என்று தீர்மானிக்க வேண்டும். பொதுவாக, தேவையில்லாத கடன்கள்தான் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், அதிக வட்டி கொண்ட தாகவும் இருக்கும். அதேசமயம், அவசர தேவை என்கிறபோது நமது கவனமும் எளிதில் கிடைக்கும் கடன்களின் மீதே செல்வதாக இருக்கும். இந்தசமயத்தில் தான் நாம் பொறுமையுடன், மிகக் கவனமாக முடிவெடுக்க வேண்டும். கடன்களைத் தரவரிசைப்படுத்துங்கள்! உணவு மற்றும் கடன்களைப் பட்டியலிட்டவுடன் அடுத்தக்கட்ட மாக ஒருவர் வைத்திருக்கும் கடன்களை தரவரிசைப்படுத்த வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், காய்கறி மற்றும் பழங்கள், இறைச்சி மற்றும் பால் போன்ற அனைத்தும் வெவ்வேறு தரத்தில் இருப்பதால், அது தரும் பயன்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்த வேண்டும். அதேபோலத்தான் கடன்களிலும், உதாரணத்துக்கு மேலே சொன்ன கிஷோர் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். அவர் வீட்டுக் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை வைத்திருந்தால், 

அவர் தன்னுடைய கடன்களை எப்படி தரவரிசைப்படுத்த வேண்டும்? 



அதிகநாள் வைத்துக்கொள்ள வேண்டிய கடன்களாக கல்விக் கடன் மற்றும் வீட்டுக் கடனையும், விரைந்து முடிக்க வேண்டிய கடன்களாக கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடனையும் வரிசைப்படுத்த வேண்டும். காரணம், கல்வி மற்றும் வீட்டுக் கடனுக்கு வரிவிலக்கு உண்டு அதேசமயம், http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com வட்டியும் குறைவுதான். ஆனால், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடனுக்கு வரிவிலக்கு கிடையாது; வட்டியும் மிக அதிகமாக இருக்கும். மிச்சமாகும் வட்டியை முதலீடு செய்யுங்கள்! தேவையில்லாத கடன்களை அடைப்பதன் மூலம் மிச்சமாகும் வட்டியை நிலுவையில் இருக்கும் இதர கடன்களை அடைக்க பயன்படுத்தலாம். அல்லது எதிர்காலத் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, கிஷோருக்கு கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை அடைத்தால், மாதம் 5,000 ரூபாய் மிச்சமாகிறது எனக் கொள்வோம். இந்தப் பணத்தை அவர் நீண்டகால அடிப்படையில் (10 வருடம்) 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்தால். முதலீடு முதிர்வின்போது 13.75 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதேபோல, அவர் புகை மற்றும் மதுவுக்காகச் செய்துவந்த செலவை கணிசமாக குறைத்துவிட்டு, அதை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம்.

உதாரணமாக, மாதம் 1,000 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், பத்து ஆண்டுகளில் 2.75 லட்சம் ரூபாயை ஈட்டலாம். உடலுக்கான டயட், கடனுக்கான டயட் இந்த இரண்டுமே ஒருமுறை செய்துவிட்டு, விட்டுவிடக் கூடாது. அப்படி விட்டுவிட்டால், அது மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையையே உருவாக்கும். தொடர்ந்து செய்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். கடனும் குறைந்து, நாம் மகிழ்ச்சியாக இருப்போம். உணவு விஷயத்தில் நாம் எல்லோரும் ‘டயட்’ இருப்பதுபோல, நிதி சார்ந்த விஷயத்திலும் ‘டயட்’ இருப்பது அவசியத்திலும் அவசியம்!http://sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here