மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு:விசாரணை குழு அமைப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு:விசாரணை குழு அமைப்பு

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, இரு பல்கலைகளின் நிதி அலுவலர் குழுவை அமைத்து உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.இப்பல்கலையில் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் நேரடி இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் (லேட்ரல் என்ட்ரி) முறைகேடுகள் நடந்தது, என பல்கலை பாதுகாப்பு கழகம் மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டின. குறிப்பாக, வெளிமாநில மாணவர் சேர்க்கையில், பலர் போலி மாற்றுச்சான்று (டி.சி.,), மதிப்பெண் சான்று அளித்தும், அதற்காக ரூ.50 ஆயிரம் வரை அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டும் சேர்க்கை வழங்கியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகின. 2014-2015ல் மட்டும், 2250 பேரின் சான்றிதழ்களின் 'உண்மை தன்மை' குறித்து சந்தேகம் எழுந்தது.இதுதவிர, வெளிமாநிலத்தில் தேர்வு எழுதும் தேர்வர் ஒருவருக்கு 'சென்டர் சேஞ்ச்' ரூ.ஆயிரம் வீதம் 2500 பேர் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையிலும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து பல்கலை கன்வீனர் கமிட்டி தலைவரான உயர் கல்வித்துறை செயலர் அபூர்வாவிடம், ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. சிண்டிகேட் உறுப்பினர் சிலரிடமும் செயலர் ரகசிய விசாரணை நடத்தினார்.இதையடுத்து, சென்னை மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை நிதி அலுவலர் (தணிக்கை) குழுஅமைத்து, முறைகேடு புகாரை இரு மாதங்களில் விசாரிக்க செயலர் உத்தரவிட்டார். இக்குழு இந்த வாரம் விசாரணை துவக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here