2016 ல் வெள்ளி,திங்கள் 9 அரசு விடுமுறை தினங்கள்:மாணவர்கள்,அரசு ஊழியர் மகிழ்ச்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2016 ல் வெள்ளி,திங்கள் 9 அரசு விடுமுறை தினங்கள்:மாணவர்கள்,அரசு ஊழியர் மகிழ்ச்சி

2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். 2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் உட்பட அனைத்து வர்த்தக வங்கி களுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள விடுமுறை அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 1-ம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 8-ம் தேதி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும். அதேபோல், சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here