பி.எஸ்.எல்.வி., சி29 ராக்கெட் இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' மற்றும் அதன் வணிக பிரிவான 'ஆண்டிரிக்ஸ்' நிறுவனம் இணைந்து, வணிக ரீதியாக பிறநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் ஆறு செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி-29 ராக்கெட் மூலம் இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 59 மணி நேர 'கவுன்ட் டவுன்' நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு துவங்கியது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட 21வது நிமிடத்தில் பூமியில் இருந்து 550 கி.மீ., உயரத்தில் ஆறு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டன.
இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர். செயற்கைக் கோள்களின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். ஆறு செயற்கைக்கோள்கள்: சிங்கப்பூர் தேசிய பல்கலை சார்பில் 'டெலஸ்- 1, வெலக்ஸ்-சி 1, வெலக்ஸ் -2, அதனாக்சாட்- 1, கென்ட் ரிட்ஜ் -1, கிளாசியா' ஆகிய செயற்கைக்கோள்கள், பூமியை ஆராயவும் சுற்றுப்புறச் சூழல் மற்றும் பேரிடர்களை கண்காணிக்கவும் விண்ணில் அனுப்பப்பட்டன.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்கள்
தேதி ராக்கெட் நாடு
1999 மே 29பி.எஸ்.எல்.வி., சி2ஜெர்மனி, கொரியா
2001 அக்., 22பி.எஸ்.எல்.வி., சி3ஜெர்மனி, பெல்ஜியம்
2007 ஜன., 10பி.எஸ்.எல்.வி., சி7 இந்தோனேசியா,அர்ஜென்டினா
2007 ஏப்., 23பி.எஸ்.எல்.வி., சி8இத்தாலி
2008 ஜன., 21பி.எஸ்.எல்.வி., சி10 இஸ்ரேல்
2008 ஏப்., 28பி.எஸ்.எல்.வி., சி9கனடா, ஜப்பான் 2, நெதர்லாந்து,டென்மார்க், ஜெர்மனி 2, கனடா
2009 செப்., 23பி.எஸ்.எல்.வி., சி14 ஜெர்மனி 4, துருக்கி, சுவிஸ்
2010 ஜூலை 12பி.எஸ்.எல்.வி., சி15 அல்ஜீரியா, கனடா, சுவிஸ்
2011 ஏப்., 20பி.எஸ்.எல்.வி., சி16சிங்கப்பூர் 2011 அக்., 12பி.எஸ்.எல்.வி., சி18 லுக்ஜெம்பர்க்
2012 செப்., 9பி.எஸ்.எல்.வி., சி21பிரான்ஸ், ஜப்பான்
2012 பிப்., 25பி.எஸ்.எல்.வி., சி20கனடா 2, ஆஸ்திரியா 2, டென்மார்க், பிரிட்டன்
2014 ஜூன் 30பி.எஸ்.எல்.வி., சி23 பிரான்ஸ், ஜெர்மனி, கனடா 2 , சிங்கப்பூர்
2015 ஜூலை 10பி.எஸ்.எல்.வி., சி28 பிரிட்டன் 5
2015 செப்., 28பி.எஸ்.எல்.வி., சி30 இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா 4
2015 டிச., 16பி.எஸ்.எல்.வி., சி29சிங்கப்பூர் 6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக