கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது: மனஅழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால், கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் அடங்குவர்.
தமிழகம் 2வது இடம் : இதில் முதல் மூன்று இடங்கள் முறையே மகாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. மகாராஷ்டிராவில் 1,191 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 மாணவர்களும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.
2013லும் மகாராஷ்டிரா முதலிடம் : 2013ம் ஆண்டில் நாடெங்கிலும் 8,423 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்தனர். இதிலும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,141 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2012ல் 6,654 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மேற்குவங்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் விவரம் கணக்கில் இல்லை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக