சேதமடைந்த வகுப்பறையை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சேதமடைந்த வகுப்பறையை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மழையால் சேதமடைந்த வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை: மழையால் சில பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணியை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களைதினக்கூலி அடிப்படையில் அமர்த்தி, பணியை முடிக்க வேண்டும்.வகுப்பறைகள், பள்ளி வளாக பகுதிகளில் 'பிளீச்சிங்' பவுடர் துாவ வேண்டும்.

மின்சார சுவிட்ச்கள் சரியாக உள்ளனவா, மழைநீரில் நனையாதபடி உள்ளனவா என, உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறை மேற்கூரையை ஆய்வு செய்ய வேண்டும்; மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளிகளை சுற்றிலும், பாதுகாப்பான தடுப்பு அமைக்க வேண்டும். விழும் நிலையில் மரங்கள் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஆபத்தான நிலையில் உயரழுத்த மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் நிலையில் மின்கம்பிகள் இருப்பின், அவற்றை அகற்ற வேண்டும். மழையால், வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், பயன் படுத்தாமல், பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அந்த அறைக்கு அருகே மாணவ, மாணவியர் செல்லாதபடி கவனித்துக்கொள்ள வேண்டும்.

தொடர் மழையால், சுற்றுச்சுவர் அதிக ஈரப்பதத்துடன் பலவீனமாக காணப்படும் என்பதால், அதன் அருகில், 10 அடி துாரம் வரை தடுப்புஏற்படுத்தி, அப்பகுதிக்கு மாணவர்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here