தமிழகம் முழுவதும் நாளை கடற்கரை பூங்காக்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் (17/1/2016) நடைபெறுகிறது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகம் முழுவதும் நாளை கடற்கரை பூங்காக்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் (17/1/2016) நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை கடற்கரை, பூங்காக்களிலும் போலியோ சொட்டு மருந்து தீவிர போலியோ செட்டு மருந்து முகாம் நாளை (17–ந்தேதி) நாடு முழுவதும் நடைபெறுகிறது.முதல் – அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்களில் முகாம் நடக்கிறது.பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம், பொது மக்கள் கூடும் இடங்களில் 1652 நடமாடும் மையங்கள் மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.மேலும் 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டம் எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழ்நாட்டில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. 12 ஆண்டுகளாக இந்நோய் கிருமி தாக்குதல் தமிழகத்தில் இல்லை. ஆனாலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

உலக அளவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தான் போலியோ உள்ளது. 21 ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்ததின் பேரில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.காணும் பொங்கல் தினத்தில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுவதால் மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது, குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால் தாய்மார்கள் படுத்துக்கொண்டே பால் கொடுக்கக்கூடாது. அப்படி செய்வதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது.புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இந்த பணியில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மருத்துவ பணிகள் இயக்குனர் மணி, இணை கமிஷனர் சி.சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here