ஐனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஐனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல்

ஜனவரி 30,31,பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் வழக்கமாக வந்து போகும் நாட்கள் அல்ல. *இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நாள். இடைநிலை ஆசிரிய நண்பர்களே கடந்த 22 வருடங்களாக நாம் பெற்று வந்த மத்திய அரசிற்கு இணையான ஊதியம் ஆறாவது ஊதியக் குழு நடைமுறைப் படுத்தப் பட்டதில் பறிக்கப்பட்டுள்ளது.

*மாதம் ரூ 11500 இழப்பை சந்தித்து வருகிறோம். *வழக்கமாக நாம் பெற்றிருக்க வேண்டிய ஊதியம் 9300-4200. ஆனால் பெற்றுக் கொண்டிருப்பதோ 5200-2800.

*9300-4200 நமக்கு கொடுக்கப் படாதாதற்கு அரசு சொல்லும் காரணம் நாம் 12 ம் வகுப்பு படிக்க வில்லையாம். கிராமப்புறத்தில் பணி புரிகிறோமாம்.கிராமங்களில் விலைவாசி குறைவாம் அதனால் நமக்கு இந்த சம்பளம் போதுமாம்.

*10 ம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 12 + டிப்ளோமா படித்த நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டாமா?

இழந்த ஊதியத்தை பெற்றெடுக்க வேண்டாமா?

பள்ளிக்கும் பள்ளியை விட்டால் வீட்டிற்கும் சென்று கொண்டிருந்தால் நாம் இழந்த ஊதியம் நமக்கு கிடைத்து விடுமா?

உங்களுக்காக மற்றவர்களா போராடுவார்கள். உங்களுக்காக நீங்களே போராட வேண்டாமா? சிறு குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் பசியையே தீர்த்துக் கொள்கிறது.

அவ்வாறிருக்க நமக்காக நாம் போராட வேண்டாமா?

ஜனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தில் பங்கு பெற்று இழந்த ஊதியத்தை மீட்டெடுப்போம்.

30 ஆம் தேதி மாவட்டத் தலைவர்கள் (அனைத்து சங்கங்களின்) தலைமையில்

31 ஆம் தேதி மாவட்டப் பொருளாளர்கள் (அனைத்து சங்கங்களின்) தலைமையில்

பிப்ரவரி 1 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் (அனைத்து சங்கங்களின்) தலைமையில் ஒன்றுபடுவோம் போராடுவோம்! என செய்தி வெளியிட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here