தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இள மாறன், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, இந்த மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கியது வரவேற்கத்தக்கது. ஆர்எம்எஸ்ஏ எனப்படும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ், 9, 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு துறை வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வரவேற்கக்கூடியதுதான் என்றாலும், மழை வெள்ளப் பாதிப்பு காரணமாக கடந்த 33 நாட்களாக பள்ளிகள் இயங்காததால் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஆர்எம்எஸ்ஏ பயிற்சிக்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 முதல் 5 ஆசிரியர்கள் சென்றுவிட்டால் அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர். ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என்பதால் இத்தகைய பயிற்சிகளை ரத்து செய்துவிட்டு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாக்டா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக