தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்.

5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல். கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மறியல் போராட்டத்துக்கு தலைமையேற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலாளர் டி.கனகராஜ் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தேர்ச்சி அறிக்கை முதன்முதலாக வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

அரசாணைப் பெற்று, 5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

சிறுபான்மை உரிமைப் பெற்ற பள்ளி நிர்வாகங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்துகின்றோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த மறியல் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பக்தவத்சலம், ஜேக்டோ அமைப்பாளர் பூபாலன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் பேசினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here