ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்!

நீங்க வெஜிட்டேரியனா…?
நான் வெஜிட்டேரியனா?…?
எங்கு வேலை பார்க்கிறீர்கள்?
சம்பளம் என்னிக்கு போடு வாஙக்?
எத்தனை குழந்தைகள்?
கூடவே பெரியவர்கள் உண்டா?
ரெண்டு நேரம் குளிக்கக் கூடாது.
முறை வாசல் தெளிக்கணும்.
5-ந்தேதிக்குள் வாடகை தரணும்.
10 மாத வாடகை அட்வான்ஸ்.

-இப்படி பல கேள்விகளுக்கு வீட்டு உரிமையாளர் அடுத்தடுத்து விடுக்கும் கேள்விகளுக்கு பதிலை சொன்னால்தான் சென்னை மட்டுமின்றி எல்லா இடங்களிலும் வீடு வாடகைக்கு கிடைக்கும். இதனால் குறிப்பாக சென்னைக்கு போனால் ஏதாவது வேலைபார்த்து பிழைத்து கொள்ளலாம் என்று வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீட்டு வாடகை கொடுத்தே விழி பிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இரண்டு,மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 4 இலக்க எண்ணிக்கையில்தான் சம்பளம் வாங்குகிறார்கள். அதில் பாதிக்கு மேல் வீட்டு வாடகைக்கு செல்கிறது. சிங்கிள் பெட்ரூம் (பாத்ரூம் இணைந்தது)-ரூ.4,000 முதல் 5,000 வரை டபுள் பெட்ரூம் ரூ.6,000 முதல் 8,000 வரை நல்ல வசதியான பெரிய வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம். ஆஸ்பத்திரி வார்டுகள் போல் கட்டி போட்டு பொது பாத்ரூம் வைத்திருக்கும் வீடுகளுக்கே ரூ.4000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

இது தவிர ஏரியாவை பொறுத்தும் வாடகை நிர்ணயித்துள்ளார்கள். அத்துடன் புரோக்கர்கள் மூலமாக வீடு அமர்த்தி னால் புரோக்கர் கமிஷன் ஒரு மாத வாடகை கொடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத கட்டாய விதி. `புரோக்கர் களை தவிர்க்கவும்’ என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு நேரில் அணுகினாலும் மேலே சொன்னபடி எக்கச்சக்க கேள்விகளை கேட்டு வெறுப் பேற்றுகிறார்கள். சரி, எப்படியோ சென்னையில்தான் குடியிருக்க வேண்டும் என்றாகி விட்டது.

கஷ்டங்களை தாங்கித்தான் ஆக வேண்டும் என்று நினைத்து கேட்ட வாடகையை கொடுத்து வீட்டை அமர்த்தி விடுகிறார்கள்.இதன் பிற்கு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் பிடுங்கும் மின் கட்டண கொள்ளையை நினைத்தாலே `ஷாக்’ அடிக்கும். அரசு நிர்ணயித்துள்ள வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் யூனிட் டுக்கு ரூ.3.50 முதல் ரூ.5 வரை வசூலிக்கிறார்கள். அது மட்டுமின்றி பெரிய வீடுகளுக்கு 11 மாதங்கள் ஒப்பந்தம் போடுகிறார்கள்.

அதன்பிறகு வாடகையை உயர்த்தி மறுஒப்பந்தம் போடுகிறார்கள். மற்றவர்களிடம் 10 மாதம் ஆனதும் இன்னும் 2 மாதத்தில் 10 சதவீதம் வாடகை உயர்த்தி தரவேண்டும். விருப்பம் இருந்தால் இருங்கள். அல்லது வேறு வீட்டை பார்த்து கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாக கூறி விடுகிறார்கள். கல்வி கட்டணம், மருத்துவ செலவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரவுக்கு மீறிய செலவுகளை சமாளிக்க முடியாமல் பலர் நிம்மதியை தொலைத்து விட்டனர். இந்த நிலையில்தான் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்காக மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது.

இதன் மூலம், வாடகை முன்பனமாக அதிக தொகை பெறுவது, அவ்வபோது வாடகை உயர்த்தப்படுவது உள்ளிட்டவைகள் கட்டுப்படுத்தப்படும் என்பதால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த வாடகை மாதிரிச் சட்டத்தை கொண்டு வரும் நிலையில், இனி வீட்டு உரிமையாளர்கள் 10, 12 மாத வாடகை யை முன்பணமாகப் பெறுவது தடுக்கப்படும். அதேபோல, குறைந்தது 3 மாத முன்பணம் வசூலிப்பது, வாடகை உயர்த்துவதை முன்கூட்டியே தெரிவிப்பது, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பிரச்னைகளை விசாரிக்க தனி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன.
இந்தச் சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here