ஜிக்கா வைரஸுக்கு தடுப்பு மருந்து ஹைதராபாத்தில் கண்டுபிடிப்பு...உலகின் முதல் ஜிக்கா தடுப்பு இதுவாகும்
ஹைதராபாத்: உலகை மிரட்டும் ஜிக்கா வைரஸுக்கு ஒன்று அல்ல இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துவிட்டோம் என ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளை கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்தே இல்லை என்று கூறப்பட்டு வந்தது.
வைரஸ் தாக்காமல் தடுக்கவும், தாக்கினால் சிகிச்சை அளிக்கவும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜிக்கா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஹைதராபாத் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் தான் மருந்து கண்டுபிடித்துள்ளது.
World's First Zika Virus Vaccine Made in India, Claim Scientists ஜிக்கா வைரஸுக்கு இரண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை விலங்குகள் மற்றும் மனிதர்களை வைத்து சோதனை செய்ய பல காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், உலகிலேயே நாங்கள் தான் முதன்முதலாக ஜிக்கா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை கோரி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு விண்ணபித்தோம்.
முறைப்படி அனுமதி பெற்று ஜிக்கா வைரஸை இங்கு கொண்டு வந்து ஆய்வு செய்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருந்தை சோதனை செய்ய அரசிடம் உதவி கோரியுள்ளோம் என்றார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், பாரத் பயோடெக் ஜிக்கா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக எங்களிடம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமாக அதை ஆய்வு செய்வோம். இந்தியாவில் ஜிக்கா வைரஸுக்கு மருந்து தயாரித்திருப்பது நல்ல விஷயம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக