தேர்வு பணியை கவனிக்க முடியாமல் பள்ளி தலைமையாசிரியர்கள் தவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தேர்வு பணியை கவனிக்க முடியாமல் பள்ளி தலைமையாசிரியர்கள் தவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பதால், தேர்வு பணியை கவனிக்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இளநிலை உதவியாளர், இரவு காவலர், அலுவலக உதவியாளர் போன்ற ஆசிரியரல்லாத பணியிடங்கள் உள்ளன. இளநிலை உதவியாளர்கள், ஆசிரியர்கள் பணப்பலன், இலவச சைக்கிள், லேப்டாப் போன்ற நலத்திட்ட உதவி கணக்குகளை பராமரித்தல், தேர்வு ஆயத்தம் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

காவலர்கள் இரவில் பள்ளி பொருட்களை பாதுகாக்கின்றனர். பல ஆண்டுகளாக உதவிபெறும் பள்ளிகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை அனுமதிப்பதில்லை. இதனால் மாநிலம் முழுவதும் உதவிபெறும் பள்ளிகளில் 2,434 ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் அனைத்து பணிகளையும் தலைமைஆசிரியர்களே கவனிக்கின்றனர். சில பள்ளிகளில் இரவு காவலர்கள் இல்லாததால் இலவச பொருட்கள் மாயமாகி வருகின்றன.

விரைவில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. பணியாளர்கள் இல்லாததால் தேர்வு ஆயத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் தலைமைஆசிரியர்கள் தவிக்கின்றனர். பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், “ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிகளையும் தலைமைஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பதால் கல்வி பணி பாதிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப பலமுறை கல்வித்துறையிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை,” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here