வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்கக்கூடாது:பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்கக்கூடாது:பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை

தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பொருளாதார ஆய்வறிக்கை குறித்து ஊடகங்களிடம் விளக்குகிறார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட 2015-16 பொருளாதார ஆய்வறிக்கையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது தனிநபர் வருவாய் இயல்பான முறையில் வளர்ச்சியடைவதற்கும் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பரிந்துரை செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை வரும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.

நாடுகளுக்கிடையேயான ஒப்பீட்டு பார்வையின்படி இந்தியாவில்தான் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறும் பொருளாதார அறிக்கை 85% பொருளாதாரம் இன்னமும் வரிவலைக்கு வெளியேதான் உள்ளது என்று கூறியுள்ளது.

அதாவது வருவான வரி உச்சவரம்பு அதிகரிப்பினால் பணக்கார தனியார் துறையினருக்கே அதிக பயனளிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. “சம்பாதிக்கும் தனிநபர்களில் 5.5% மட்டுமே வரி வலைக்குள் உள்ளனர். எனவே 23% ஆக இது அதிகரிக்கப்படுவது அவசியம்” என்று பரிந்துரைக்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. இதுகுறித்து சுதந்திரத்துக்குப் பிந்தைய தரவுகளை ஆய்வு செய்து வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதனடியில் உள்ள வருவாய் வளர்ச்சியைக் காட்டிலும் அதிவேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது,

இதனால் சராசரி வருவாய்க்கும் உச்ச வரம்புக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை அறுதியிட்டுள்ளது. எனவே, “தொழிற்துறை, சேவைகள் துறை, ரியல் எஸ்டேட், வேளாண் துறை என்று எங்கிருந்து வருவாயை ஈட்டினாலும் வசதி படைத்தவர்களின் வருவாய்க்கு ஓரளவுக்கு அதிக வரி விதிப்பு செய்வதே நல்லது.

இதனால் நம்பகத்தன்மை ஏற்படும்” என்கிறது ஆய்வறிக்கை. சொத்து வரியை அதிகரிக்கவும் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. “சொத்து வரியை அதிகரிப்பது விரும்பத்தக்கது, ஏனெனில் இதில் வரி ஏய்ப்பு செய்வது கடினம். நகராச் சொத்துக்கள் என்பதால் எளிதில் அடையாளம் கண்டு விட முடியும். “ஸ்மார்ட் நகரங்களுக்கு பொது நிதி அவசியம், மற்றும் வலுவான சொத்து வரி விதிப்பு முறையும் இந்தியாவின் எதிர்கால நகர்ப்புற வளர்ச்சிக்குஅவசியம்” என்கிறது ஆய்வறிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here