மனிதகுல வரலாற்றையே பதிவு செய்திடும் சூப்பர் குறுந்தகடு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மனிதகுல வரலாற்றையே பதிவு செய்திடும் சூப்பர் குறுந்தகடு!

இதுவரை இல்லாத அளவு 360 டெராபைட் மின்னணுத் தகவல்களுடன் 1,380 பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கியுள்ளது.

நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு, சிறிய நாணயத்தின் அளவே இருந்தாலும், இதில் 360 டெராபைட் (3.6 லட்சம் ஜிகாபைட்) அளவிலான மின்னணுத் தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து பரிமாணப் பதிவு முறை மூலம், ஒரு விநாடியின் ஆயிரங்கோடி கோடி கோடியின் ஒரு பகுதி நேரத்துக்கு ஒருமுறை தகவல்களைப் பதிவு செய்யும் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த குறுந்தகட்டில் தகவல்கள் பதிவு செய்யவும், மீண்டும் பெறவும் முடியும்.

இதன் நவீனத் தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு தகவல் புள்ளியும் 5 மைக்ரோமீட்டர்(ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) இடைவெளியில் அமைந்துள்ளாதால், மிகச் சிறிய இடத்திலேயே அதிக தகவல்களைப் பதிவு செய்ய முடிகிறது. 1,000 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை இந்தக் குறுந்தகடு தாக்குப் பிடிக்கும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

190 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் கூட இந்தக் குறுந்தகடு 1,380 கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும். சாதாரண வெப்ப நிலையில் இந்தக் குறுந்தகடுகள் எல்லையற்ற வாழ்நாளைக் கொண்டிருக்கும். இத்தகைய சிறப்பு மிக்க இந்தக் குறுந்தகடுகளுக்கு, "சூப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட தகவல் பல கோடி ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும் என்பதால், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்கும் துறையினருக்கு இந்த குறுந்தகடுகள் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

மனித குலம் அழிந்தாலும், மனித வரலாறும், அவர்கள் கற்றுக் கொண்டதும் அழிந்து போய்விடாமல் இந்த குறுந்தகடுகள் பாதுகாக்கும் என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர் கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக் கூடிய குறுந்தகடை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here