ராகுல் ,அரவிந்த் கெஜ்ரிவால் ,ஆனந்த் சர்மா ,அஜய் மக்கான் ,சீதாராம் யெச்சூரி ,டி.ராஜா, கேசி தியாகி, கன்னையா குமார் ,உமர் காலித் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ராகுல் ,அரவிந்த் கெஜ்ரிவால் ,ஆனந்த் சர்மா ,அஜய் மக்கான் ,சீதாராம் யெச்சூரி ,டி.ராஜா, கேசி தியாகி, கன்னையா குமார் ,உமர் காலித் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு

9 பேர் மீது தேச துரோக வழக்கு..ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால்,ஆனந்த் சர்மா, அஜய் மக்கான், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, கேசி தியாகி, கன்னையா குமார், உமர் காலித் ஐதராபாத்: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 9 பேர் மீது ஐதராபாத்தில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், அப்சல் குரு நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இங்கு சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். ஐகோர்ட் உத்தரவுப்படி சில மாணவர்கள் போலீசில் சரணடைந்தனர்.

மாணவர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இடது சாரி கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், சைபெராபாத் நகரில் உள்ள சூரர்நகர் போலீஸ் ஸ்டேசனில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, அஜய் மக்கான், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, கேசி தியாகி, சிறையில் உள்ள மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், உமர் காலித் ஆகியோர் மீது வழக்கறிஞர் ஜனார்த்தன் கவுட் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில், கோர்ட் உத்தரவு காரணமாக தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மீது ஐ.பி.சி., 124ஏ, சிஆர்பிசி 156(3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சூரர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ் லிங்கையா கூறுகையில், இது கோர்ட் விவகாரம். கோர்ட் உத்தரவுப்படி ஐ.பி.சி., 124 ஏ பிரிவுப்படி ராகுல் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். ஜனார்த்தன் கவுட் கடந்த வியாழக்கிழமை தாக்கல் தனது மனுவில், கன்னையா குமார் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தும், ராகுல் மற்றும் தலைவர்கள் ஜேஎன்யுவுக்கு சென்று, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தேச துரோகம் ஆகும் எனக்கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராகவும், அப்சல் குருவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பிய கன்னையா குமார், உமர் காலித் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தா தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here