ஏப்ரல் 11 முதல் மத்திய அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்:சமரச பேச்சு தோல்வி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஏப்ரல் 11 முதல் மத்திய அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்:சமரச பேச்சு தோல்வி

தமிழகத்தில் அரசு ஊழியர் -தமிழ்நாடு  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து நடத்தி அரசின் மௌனம் கலைத்த  வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தொடர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

மதுரை:' அரசுடன் பேச்சு தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஏப்.,11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும்' என மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், 52 வகையான படிகளை ரத்து செய்யக்கூடாது, ஐந்து முறை பதவி உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,11 முதல், மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

மார்ச் 11ல் மத்திய அரசுக்கு இதுகுறித்து 'நோட்டீஸ்' வழங்க உள்ளனர். இதையடுத்து சங்கத்தினருடன் முதற்கட்ட பேச்சு பிப்.,19ல் நடந்தது. மத்திய நிதித்துறை செயலர் ஆர்.கே.சதுர்வேதி, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலருமான சிவகோபால் மிஸ்ரா, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அது தோல்வியில் முடிந்ததால், இரண்டாம் கட்ட பேச்சு மார்ச் 1ல் கேபினட் செயலர் பிரதீப்குமார் சின்கா தலைமையில் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. 'திட்டமிட்டபடி ஏப்.,11 முதல் வேலைநிறுத்தம் தொடங்கும்' என போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here