மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமுல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண் 6.73 சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங் கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here