பகுதி நேர சிறப்பாசிரியர்கள் 'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை' அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, சங்க பிரதிநிதிகளை அழைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சு நடத்தினார்.அப்போது, 'தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அதற்கு முன், 7,000 ரூபாய் சம்பளத்தை, 12 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; பள்ளி வேலை நாட்களை உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பதில் அளித்தபோது, 'நீங்கள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் பணியாற்றுவதால், உங்களை நிரந்தரம் செய்யும் திட்டம், www.ednnet..inதற்போதைக்கு இல்லை; ஊதிய உயர்வு குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, டில்லி சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசிய பின் முடிவு செய்யப்படும்' என, கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக