நடிகர் கலாபவன்மணியின் உடலில் பூச்சி மருந்து விஷம்....கொலை? தற்கொலை?
பரிசோதனையில் தகவல் .
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, மரணமடைந்ததற்கு விஷமே காரணம் என்ற உண்மை, பிரதே பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் அவரது உடலில் ‘மெத்தனால்’ என்ற போதை அளிக்கும் ரசாயனம் அதிகளவில் இருந்தது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கலாபவன் மணியின் உடல் உள்ளுறுப்புகளின் மாதிரிகள் ரசாயன பரிசோதனைக்காக காக்கநாட்டில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், அவரது உடல் உள்ளுறுப்புகளில் சைக்ளோபைரிபோஸ் என்ற பூச்சிக்கொல்லி தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இத்தகவல், வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பண்ணை வீட்டில் மது விருந்து நடந்தபோது அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே கலாபவன் மணியின் உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண ஆட்டோ டிரைவராக இருந்த கலாபவன்மணி, நடிகரான பிறகு ஏராளமான சொத்துக்கு அதிபதியானார். அதுமட்டும் இன்றில் அவரின் சொந்த ஊரில் நடிகரானப் பிறகும் சாதாரண மனிதராகவே மக்களிடம் பழகியதால், அவர் மக்கள் மனதிலும் பெரிதும் இடம் பிடித்தார். இதையடுத்து, அவர் அரசியலிலும் நுழைய முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக