தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டனர்... நீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்ஸ் னோரா அமைப்பைச் சேர்ந்த எம்.பி. நிர்மல் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘‘கடந்த பிப்ரவரி 23-ம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலையோரத் தில் வசித்த விமல் என்ற 8 மாத குழந்தை கடத்தப்பட்டது. இதேபோல எஸ்பிளனேடு பகுதியில் வசித்த சரண்யா என்ற 9 மாத பெண் குழந்தை மார்ச் மாதம் மாயமாகியுள்ளது. சென்னையில் இதுபோல சாலை யோரங்களில் வசிக்கும் குழந்தைகளை ஒரு கும்பல் குறிவைத்து கடத்தி அக்குழந்தைகள் மூலமாக சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் 28-ம் தேதி நடிகர் ஆர்.பார்த்திபனின் மனித நேய மன்றம் மற்றும் லதா ரஜினிகாந்தின் தயா பவுண்டேஷன் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் மாநகர போலீஸ் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அந்தக் குழந்தைகளை கண்டுபிடிக்கவில்லை. மாயமான குழந்தைகளை கண்டுபிடிப்பதுடன், எஞ்சிய குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. தமிழகத்தில் கடந்த 2014-ல் தமிழகத்தில் 441 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 114 குழந்தைகளைக் காண வில்லை.
2015-ல் தமிழகத்தில் 656 குழந்தைகளைக் காணவில்லை. இதில் 149 பேர் சென்னையில் கடத்தப்பட்டுள்ள னர். இதேபோல் இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் வரை தமிழகம் முழு வதும் 271 குழந்தைகளைக் காண வில்லை. இதில் சென்னையில் மட்டும் 58 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். பெண் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்பட்டுள்ளனர். எனவே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது ஏற்கனவே, காணாமல் போன 2 குழந்தை களையும் கண்டுபிடித்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எஸ்பிளனேடு போலீஸாருக்கு உத்தர விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க இன்னும் கால அவகாசம் தேவை என கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ‘‘குழந்தைகள் கடத்தப்படுவதை அவ் வளவு சாதாரண விஷயமாக எடுத் துக்கொள்ள முடியாது.
குழந்தைகளை பறிகொடுத்தவர்களுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் தெரியும். எனவே இந்த வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் மாயமாகி உள் ளனர்? அல்லது கடத்தப்பட்டுள்ளனர்?. அது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகளில் இன்னும் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை? குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? எத்தனை வழக்குகள் புலன் விசாரணை நிலையில் உள்ளன? என்ற புள்ளி விவரத்தை உள்துறைச் செய லாளர் 2 வாரத்தில் விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக