அமெரிக்க துப்பாக்கி சூடு! ஆயுததாரி "கலிபா சிப்பாய்" என ஐ.எஸ்.இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு..... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அமெரிக்க துப்பாக்கி சூடு! ஆயுததாரி "கலிபா சிப்பாய்" என ஐ.எஸ்.இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு.....

வாஷிங்டன் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று வானொலியில் அறிவிப்பு வெளியிட்டு உள்ள ஐ.எஸ். அமைப்பு ஆயுததாரி ”கலிபா சிப்பாய்” என்று அறிவித்து உள்ளது. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்; இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. இவருக்கு போராளிகள் குழுக்களுடன் தொடர்பு எதுவும் இருந்ததா என்பது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதற்கிடையே இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக்கொன்ற உமர் மாதீன் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என்று அமெரிக்க புலனாய்வு வட்டார தகவல்கள் வெளியாகிஉள்ளது. இதற்கிடையே ஆர்லாண்டோ இரவு விடுதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பும் பொறுப்பு ஏற்று கொண்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை ஐ.எஸ். அமைப்பின் அல்பயான் குழு வானொலி வெளியிட்டது. தாக்குதல் நடத்தியவர் ”கலிபா சிப்பாய்” என்று அறிவித்து உள்ளது. ஐ.எஸ். அமைப்பு சிரியா மற்றும் ஈராக்கில் கடந்த 2014-ம் ஆண்டு கலிபாவை அறிவித்தது. ஆர்லாண்டோ சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஓரினச்சேர்க்கையாளர் விழா, இதர விழாக்கள் நடைபெறும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here