கல்வி உதவித் தொகை அறிவிப்பு உண்மையா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வி உதவித் தொகை அறிவிப்பு உண்மையா?

உதவித் தொகை அறிவிப்பு உண்மையா? சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும் என வரும் அறிவிப்பு காரணமாக அலுவலகங்களுக்கு பெற்றோர்கள் நடையாய் நடக்கின்றனர். இதனால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில், பிரதமர் நரேந்திரமோடியின் திட்டமான அப்துல் கலாம், வாஜ்பாய் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்புத் தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் இத்திட்டம் நகராட்சி, மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது எனவும், அறிவிப்பு வலம் வருகிறது.

இதனால் பெற்றோர்கள் நகராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறுகின்றனர். அங்கு சென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லுங்கள் என அதிகாரிகள் அலைய விடுகின்றனர். அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால், இந்த அறிவிப்பை வாட்ஸ் அப்பில் நாங்களும் பார்த்தோம். ஆனால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து இது வரை எவ்விதமான எழுத்துப் பூர்வ உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. இந்த அறிவிப்பு போலியா, உண்மையா என அரசு தெளிவுபடுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here