உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை என விஜயகாந்த் கைவிரிப்பு தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை என விஜயகாந்த் கைவிரிப்பு தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சி

விஜயகாந்த்: 'உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது' என, விஜயகாந்த் கைவிரித்ததால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் நிறைய செலவு செய்தும், இவர்கள் படுதோல்வி அடைந்தனர். இதனால், இவர்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தேர்தல் செலவுக்கு, கட்சி தலைமையும் பணம் கொடுக்கவில்லை. இதை தோல்விக்குப் பின், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்திய போது, பலரும் குறிப்பிட்டனர். அதை கேட்டறிந்த விஜயகாந்த், 'உங்கள் கஷ்டம் புரிகிறது;

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாயை, விரைவில், கட்சி தலைமை சார்பில் வழங்க ஏற்பாடு செய்கிறேன்' என, உறுதி அளித்தார்; ஆனால், பணம் கொடுக்க வில்லை. இந்நிலையில், தே.மு.தி.க.,வின், 14 மாவட்ட செயலர்கள் சேர்ந்து எழுதப்பட்டதாக, சமூக வலைதளங்களில் ஒன்பது பக்க கடிதம் பரவியது. இந்த கடிதத்தில், விஜயகாந்த் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், தாங்கள் கட்சிக்காக அளித்த, ௫௦௦ கோடி ரூபாய் பணத்தை, விஜயகாந்தும், குடும்பத்தினரும் எடுத்து சென்று விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, கட்சியின் மா.செ.,க்கள் கூட்டத்தை, நேற்று கூட்டினார் விஜயகாந்த். இதில், 27 பேர் மட்டுமேபங்கேற்றனர்.

ஒவ்வொரு மா.செ.,விடமும், விஜயகாந்த் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது, கட்சியை உடைக்க, தி.மு.க., - அ.தி.மு.க., எடுக்கும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்து உள்ளார்.அதற்கெல்லாம் பதிலளித்த மா.செ.,க்கள், 'வாங்கிய கடனை அடைக்க, பணம் தருகிறேன் என, சொன்னீர்களே, என்னாச்சு?' என, கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், 'என்னிடமும் பணம் இல்லை' என, கைவிரித்துள்ளார். இதனால், கூட்டத்திற்கு வந்த அத்தனை மாவட்ட செயலர்களும், விஜயகாந்த் மீது கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:'கட்சி நடத்தி, ஏகப்பட்ட பணம் செலவாகி விட்டது. அதனால், நானே கடும் பொருளாதார சிக்கலில் உள்ளேன். அதனால், உங்களுக்கு பணம் கொடுத்து என்னால் உதவ முடியாது' என, அனைத்து மாவட்ட செயலர்களிடமும், விஜயகாந்த் கூறியுள்ளார்.பணம் வெளியில் கேட்டுள்ளேன்;கிடைத்தால், ஆளுக்கு கொஞ்சம் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.பலரும் கட்சி மாறும் சூழ்நிலையில், பணத்தை வாங்கிக் கொண்டும், கட்சி மாறத்தான் போகின்றனர் என்று நினைக்கும் விஜயகாந்த், கட்சி மாறுகிறவர்களுக்கு எதற்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என, பின்வாங்கி உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. 'நிலைமை இப்படிச் சென்றால், கட்சியில் விஜயகாந்த் மட்டும் தனித்துக் கட்டம் கட்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்; மற்றவர்கள் வேறு கட்சிக்கு ஒட்டுமொத்தமாய் சென்று விடுவோம்' என, மிக அதிகமாய் பாதிக்கப்பட்ட, மா.செ., ஒருவர் கூறினார். --

தே.மு.தி.க.,வினர்தி.மு.க.,வில் ஐக்கியம் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள், நேற்று ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., துணைச் செயலர் எம்.ஆர்.டி.ரவி தலைமையில் பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலர் ஸ்டாலின், ஆர்.கே.பேட்டை ஒன்றியச் செயலர் கணபதி ஆகியோர் நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். இதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் உஷா ஸ்டாலின், பள்ளிப்பட்டு பேரூராட்சி கவுன்சிலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்டோர், தே.மு.தி.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here