ஸ்வாதி கொலை தொடர்பாக, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பதிவை படிக்க நேர்ந்தது. பிராமண பெண் இறந்ததனால்தான் யாரும் இது பற்றி சரியாக கண்டுகொள்ளவில்லை. தலித் இயக்கங்கள் போராட இல்லை, திராவிட பொறுக்கிகள் எங்கே சென்றார்கள் என்கிற ரீதியில் எழுதி இருக்கிறார். தலித் மக்கள் மீது பெரும் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது, குஜராத்தில் இனக்கலவரத்தில் பலரும் உயிர் இழந்து, உடமை இழந்து இன்னமும் அந்த கொடுமையால் தவித்து வருகிறார்கள். அப்போதெல்லாம் பல ஒய்.ஜி. மகேந்திரன்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இறந்தது ஒரு உயிர், அது பிராமண சாதி என்றாலும், வேறு என்ன சாதி என்றாலும், அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது, கொலைகாரனை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவது நிச்சயம் நடந்தே ஆகவேண்டும். ஆனால் திடீரென இந்த பிராமணர்கள் பொங்குவது ஏன் என்று தெரியவில்லை.
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஊரில் உள்ளவன் எல்லாம் குரல் கொடுக்க வேண்டும். ஊரில் வேறு யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால், நீங்கள் வீட்டில் வெங்காயப் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பீர்களா? என்னய்யா இது ரொம்ப அநியாயமா இருக்கே. முதலில் பலருக்கும் பிரச்சனை ஏற்படுத்துவதே உங்களவா தானே யா?
இதில் இருக்கும் ஆச்சர்யம், இன்னமும் காவல்துறை கொலைகாரனை சிசிடிவி கேமராவில் தேடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் அவனுக்கு பெயர் வைத்து, என்ன மதம் என்பது வரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது போன்ற நேரங்களில்தான் ஊடகங்களும், காவல்துறையும், புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும். சில பல மாதத்திற்கு முன்னர் ஒரு பள்ளியில் ஒரு குழந்தை மரணம் என்று செய்தி வந்தது, அப்போது ஒய்.ஜி. மகேந்திரன் எங்கே வெளிநாட்டில் இருந்தார் போல, ஒருவேளை அந்த குழந்தை பிராமண குழந்தையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக