2 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறனிலுள்ள குறைகளை களைய திட்ட இயக்குநர் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறனிலுள்ள குறைகளை களைய திட்ட இயக்குநர் உத்தரவு

திறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன? அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த கல்வியாண்டில்,ஆசிரியர் பயிற்றுனர்களால்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம் வாசித்தல்,எழுதுதல்,மற்றும் எளிய கணக்குகளை மேற்கொள்ளுதல் சார்ந்த,அனைத்து மாணவர்களின் திறன் குறித்து,ஆறு மாத கால இடைவெளியில்,தனித்தனி மாணவர்களின் திறன் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம்,ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது.இந்த ஆய்வு பணிகள் மூலம்,மாணவர்களின் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால்,நடப்பு கல்வியாண்டிலும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,முதல்கட்ட ஆய்வு பணியை,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில்இரண்டு பிரிவாகவும்,இரண்டாம் கட்ட ஆய்வு பணியை பிப்.,மார்ச் மாதங்களில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் போது,ஒவ்வொரு மாணவர்களின் தனித்தனி மதிப்பீட்டை ஆய்வு செய்து,திறன் முன்னேற்றம் குறித்து,பதிவுகள் பராமரித்து அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஜூலை,ஆக.,மாதங்களில் நடக்கும் ஆய்வுகளின் அறிக்கையை,செப்., 5க்குள்ளும்,பிப்.,மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும் ஆய்வுபணிக்கான அறிக்கையை,ஏப்., 5க்குள்ளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here