கபாலி திரைப்பாடத்திற்காக 200 இணையதளங்கள் முடக்கம்:நீதிமன்றம் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கபாலி திரைப்பாடத்திற்காக 200 இணையதளங்கள் முடக்கம்:நீதிமன்றம் உத்தரவு

கபாலி திரைப்பட குழுவினர் தொடர்ந்த வழக்கு: 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க ஐகோர்ட் உத்தரவு கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் முழுபடமும் வெளியாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி படக்குழுவினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழுவினர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கபாலி படம் டிஜிட்டலில் வெளியாவதால், படம் வெளிவந்த 5 முதல் 10 நிமிடத்திலேயே இணையதளத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இணையதளங்களை தடை செய்தால், அவை வேறு பெயர்களில் மறுபடியும் உலா வருகிறது. இதனை தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். படக்குவினரின் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்கவும், அனுமதியின்றி இயக்கும் 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here