31/07/2016 AFTERNOON NEWS - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

31/07/2016 AFTERNOON NEWS



            






📡அஸ்ஸாம், பிகாரில் வெள்ளத்துக்கு 52 பேர் பலி

அஸ்ஸாம், பிகார் மாநிலங்களில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 63 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📡காஞ்சி, குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ல் உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி லட்ச தீப திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி, குறிப்பிட்ட நாளில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

📡கிருஷ்ணகிரி- நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை மறுநாள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

📡பொன்னேரியில் பல்பொருள் அங்காடியில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பல்பொருள் அங்காடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. 


📡குஜராத்தில் பண மோசடி புகாரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

குஜராத்: குஜராத்தில் பண மோசடி புகாரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப்சர்மா கைது செய்யப்பட்டது. பிரதீப் சர்மா அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


📡மாயமான விமானத்தில் பயணித்தவர் மொபைல் இயங்குகிறது

சென்னை : சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு ஜூலை 22 ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி 9வது நாளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.மாயமான விமானத்தை தேடும்பணியில் போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காட்டுப்பகுதிக்குள் விமானம் போன்ற ஒரு பெரிய பொருள் பலத்த சத்தத்துடன் நொறுங்கி விழுந்ததை அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் பார்த்ததாக கூறப்படுவதால் விமானப்படையை சேர்ந்த 6 பேர் கொண்ட குழு அங்கு விரைந்துள்ளது.இதற்கிடையில், விமானத்தில் இருந்த விமானப்படை அதிகாரியான ரகுவீர் வர்மாவின் குடும்பத்தினர், ரகுவீரின் மொபைல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது 'ரிங்' செல்வதாகவும், ஆனால் மறுமுனையில் யாரும் போனை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


📡டெல்லி விமான நிலையத்தில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும், திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுக்கும் இடையே நடந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. திருச்சி சிவா கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி அறுந்து போகும் அளவுக்கு அடித்துள்ளார் சசிகலா புஷ்பா.

📡டெல்லியில் அப்துல் கலாம் நினைவிடம் திறப்பு - அறிவுசார் மையமும் அமைக்க நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தை, மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். டெல்லி ஹாட் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் கலாம் பயன்படுத்திய பொருட்கள், அவரின் அரிய புகைப்படங்கள், புத்தகங்கள், வீணைகள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். 


📡சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் ரத்தம்... கொலை வழக்கில் திடீர் திருப்பம்...!

சென்னை: சுவாதியை வெட்ட்ப பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் ரத்தமாதிரி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேகரிப்பட்டது.


📡வைரமுத்துவின் மனதில் இருந்தது வந்து விட்டது.. கலைப்புலி தாணு

சென்னை: வைரமுத்துவின் மனதில் இருந்ததுதான் வாய் மூலமாக வந்துள்ளது. அவர் என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். ஆனால் பதிலுக்கு நாங்கள் விமர்சிக்கத் தயாராக இல்லை என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், கபாலி பட தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு கூறியுள்ளார்.


📡கோவையில் 930 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

கோவை : கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணியிடம் இருந்து 930 கிராம் எடையிலான 8 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானத்தில் வந்த கேரளாவை சேர்ந்த சல்மான் சரீஷ்(25) என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அவர், 8 தங்கக்கட்டிகளை மலக்குடலில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 930 கிராம் எடையுள்ள அந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் 26 லட்சமாகும்.



📡சவுதி அரேபியாவில் பல தொழிற்சாலைகள் திடீர் மூடல் - வேலையிழந்தவர்களுக்கு உணவளிக்க இந்திய தூதரகம் ஏற்பாடு

சவுதி: சவுதி அரேபியாவில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்து, உணவின்றி தவித்து வருகின்றனர். சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த ஏராளமான இந்தியர்கள் கடும் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். வேலைக்காக லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கி வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், மீண்-டும் சொந்த நாடு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் ஒரு வேலை உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபயாவில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவு இன்றி துன்பப்படுவதாகவும், அவர்களுக்கு உணவு வழங்க இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.


📡சுவாதி கொலையாளி யார் எனத் தெரியும்... விரைவில் அறிவிப்பேன்: ராம்குமார் வக்கீல் பரபரப்பு பேட்டி

சென்னை: சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளதாகவும், விரைவில் கொலையாளியை அறிவிப்பேன் என்றும் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


📡அரபிக் கடல் மீன்பிடித் தடைக்காலம் முடிவு:கடலுக்குள் செல்ல தமிழக மீனவர்கள் தயார்!

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஞாயிறு) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.



📡அஸ்ஸாம், பிகார் மாநிலங்களில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 63 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

📡பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


📡திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்க பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு



📡அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரைவாக முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து, அதற்கான அட்டவணையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


📡எம்பிஏ, எம்சிஏ போன்ற தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தியே மாணவர் சேர்க்கை நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


📡பலவீனங்களுக்கு இடமளிக்காமல் தேமுதிக தொடங்கியபோது எடுத்துகொண்ட லட்சியத்தை வெல்லும் வரை ஒன்று சேர்ந்து உறுதியோடு பயணிப்போம்--விஜயகாந்த்



📡நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை ஹெலிகாப்டரில் மீட்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


📡அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏர் பலூன் ஒன்று அதிக வெப்பத்தால் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இருந்த 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


📡தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாகத் தேவை--அன்புமணி ராமதாஸ


📡நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சம்பந்தி செல்லப்பாண்டியனிடம் இருந்து அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது.

📡சுவாதி கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: ராம்குமார் வக்கீல் வலியுறுத்தல்

📡7000 போலி வழக்கறிஞர்கள்: சன்றிதழ் சரிபார்க்கும் பணியில் பார் கவுன்சில்


📡நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்ததை பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு தரப்பு மக்களிடையே சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஆணை வரும் வரை திருவிழா நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


📡சவுதி அரேபியாவில் வேலையின்றி 3 நாட்களாக 800 இந்தியர்கள் பட்டினியால் தவிக்கின்றனர்.


📡சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை- புறக்கணிப்புதான்-- ஸ்டாலின்


📡சுடுகாட்டில் படுப்பதில் பயமில்லை; சுதந்திர நாட்டில் நடமாடுவதே அச்சமாக உள்ளது-- ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்



📡செஞ்சியில் தொடர் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களை கண்டித்து, வரும் 3ம் தேதி கடையடைப்பு நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.


📡விருத்தாசலம் டவுன் ஸ்டேஷன் முதல் விருத்தாசலம் ஜங்ஷன் வரை இரட்டை வழி ரயில் பாதைக்கான தண்டவாளம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.


📡அனைத்து அரசு கல்லுாரிகள் மற்றும் கடற்கரை சாலையில் இலவச 'வைபை' வசதி ஒரு மாத காலத்தில் தொடங்கப்பட உள்ளது--முதல்வர் நாராயணசாமி


📡புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில் தினமும் கட்சி தொண்டர்களின் குறைகள் கேட்கப்படும்-- முதல்வர் நாராயணசாமி



📡சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த 5 வழக்குரைஞர்கள், விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட்டனர்.


📡விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர், காதலித்த பெண்ணுக்கே தீ வைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.


📡வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



📡ராம்குமாருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.





📡ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ம்தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


📡ஐரேனிபுரம் CSI நர்சிங் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை பெற மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது



📡புல்லட் ரயில் விட்டால் அதில் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதில் மோடியும் அவரது சூட்- பூட் அணிந்த நண்பர்களும்தான் பயணம் செய்ய முடியும்--ராகுல்காந்தி



📡கடலூர் மத்திய சிறையில் விழுப்புரம் கைதி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

📡அ.தி.மு.க., ஆட்சி பற்றியும் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக விமர்சித்ததால் திருச்சி சிவாவை நான்கு முறை அறைந்தேன் என அ.தி.மு.க., எம்.பி. சசிகலா புஷ்பா கூறினார்.



📡எலும்பு முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடிகர் கமலுக்கு, நேற்று மேலும் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.

📡அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசித்துவரும் குடும்பங்கள் இலவசமாக எரிவாயு உருளையைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை--மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்


📡தில்லியில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாலிவுட் இயக்குநர் மெஹ்மூத் ஃபரூக்கி குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

📡நாடெங்கிலும் ஆறு மாதங்களுக்குள் பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📡பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்து டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


📡சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசவுள்ளார்.

📡நாடாளுமன்ற கேள்வி நேரம் வீணடிக்கப்படுவது வேதனை-- ஹமீத் அன்சாரி, குரியன்

📡கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ், ஐரோப்பிய நாடான பெல்ஜியம் மருத்துவமனையில் மரணமடைந்தார்.


📡வீட்டில் மது வைத்திருந்தால் குடும்பத்திற்கே சிறை: பீஹாரில் புதிய மது விலக்கு சட்டம் வருகிறது

📡போதை மருந்து கடத்தல் வழக்கு: நடிகை மம்தா குல்கர்னியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

📡கர்நாடகாவில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டி, பெண் அதிகாரியை, 'அடித்து, பல்லை உடைத்து விடுவேன்' என, மிரட்டல் விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

📡மணிப்பூர் மாநிலத்தில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், மூன்று கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.


📡உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷிரம்ஜீவி விரைவு ரயிலில் கடந்த 2005-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹூஜி) அமைப்பு பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை விதித்து ஜான்பூர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.


📡குஜராத்தில் ஆங்கில வழி பள்ளி ஒன்றில் 3 வயது மகனை அடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📡காஷ்மீரில் மீண்டும் நடைபெற்ற கலவரம் காரணமாக பாதுகாப்பு படை வீரர்கள் 46 பேர் உள்பட 100க்கும் அதிமானோர் காயம் அடைந்தனர்.


📡உத்தரகாண்டை சேர்ந்த பாஜ தலைவர்களில் ஒருவரான ஹரக் சிங் ராவத், 32 வயதான அசாம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


📡பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



📡3 ஆண்டுக்குப் பின் மீண்டும் கிடுகிடு உயர்வு : தங்கம் ரூ.24,000 ஐ தாண்டியது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.344 அதிகரித்து, முதன்முறையாக ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மூன்றாண்டில் முதன் முறையாக உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு ஆபரணத் தங்கம் விலை அதிகரித்தது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here