7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அலுவலர் குழு அமைக்கப்படும் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அலுவலர் குழு அமைக்கப்படும்

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும். இதுதொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: அரசு அலுவலர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் வழங்க புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2016 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படுத்துவதற்காக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற முடியும். தற்போது நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் உச்சவரம்புத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.129 கோடியும், ஓய்வூதியம், ஓய்வுகாலப் பலன்களுக்கு ரூ.18,868 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழாவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தமிழக அரசு அலுவலர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here