அடுத்த ரயிடு கலக்கத்தில் திமுக வின் பொருளாதார புள்ளிகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அடுத்த ரயிடு கலக்கத்தில் திமுக வின் பொருளாதார புள்ளிகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதும், வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு ஊடகத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, ‘இந்த சோதனை உள்நோக்கம் கொண்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜெகத்ரட்சகன் நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு கருணாநிதி அறிக்கையில் குறிப்பிட்டுச் சொன்னதற்கு உள்ளே பல நோக்கங்கள் உள்ளன என்கிறார்கள் உடன்பிறப்புகள். காரணம், வழக்கமான அதிரடி சோதனைகளையும் தாண்டி, ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்த ரெய்டு 'அடிதடி ரெய்டு' ஆக இருந்திருக்கிறது. ஜெகத்ரட்சகன் வீட்டிலிருக்கும் பணியாளர்கள் சிலரை வருமான வரித்துறையினர் அடித்துள்ளனர். இந்த 'அட்டாக்கிங்' சோதனையில் வேலைக்காரர் ஒருவரின் கை முறிந்துள்ளது. இதனால்தான் ரெய்டு வழக்கத்தைவிட கொஞ்சம் 'நீண்டதாக' மூன்று நாட்கள் நடந்துள்ளது. இத்தகவல்களை கேள்விப்பட்டு கொதித்துப் போயிருக்கிறார்கள் உடன் பிறப்புகள். இதுகுறித்து திமுக தரப்பில் கேட்டபோது, “தலைவர் கலைஞர் தேர்தலுக்கு பின்னர் பாஜக-வுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்கிறார். அவர் பேசும் விஷயங்கள் முன்பைவிட அதிகமாக ஊடகக் கவனம் பெறுகிறது. மோடி மீதும், பாஜக மீதும் அதிமுக-வுக்கு தேர்தலில் உதவியது, முறைகேடு செய்தது குறித்து நெருக்கடி கொடுக்கிறார். அதோடு திமுக முன்பைவிட பலம் பொருந்திய கட்சியாக மாறியுள்ளது. காங்கிரஸும் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கிறது. இதனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு திமுக-வும், திமுக உருவாக்கும் அணியும் தலைவலியாக இருக்கும். இதனால்தான் எங்களை கார்னர் செய்வதற்காக இப்படி செய்கிறார்கள்” என்கிறார்கள். மேலும், திமுக-வின் ‘மெயின் சோர்ஸிங்’ தலைவர்கள் வீட்டில் அடுத்தடுத்து பல ரெய்டுகள் நடக்கலாம் என்ற தகவலால் அச்சத்தில் இருக்கிறார்கள் பல மாஜிக்கள். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “இந்த விவகாரம் குறித்து நாங்கள் கருத்து சொல்லத் தயாராக இல்லை” என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here