பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது வரும்? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது வரும்?

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

           'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.

             சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - வேலு: தமிழக அரசு அலுவலர் களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தகுந்த பரிந்துரை அளிப்பதற்காக, உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, எப்போது குழு அமைக்கும்; குழு பரிந்துரைகள் எப்போது நிறைவேற்றப்படும்; இதற்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? அமைச்சர் பன்னீர்செல்வம்: குழு அமைக்கப்படும் போது, எவ்வளவு காலம் என, நிர்ணயிக்கப்படும். அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்; குழு அமைப்பதற்கு முன், எவ்வாறு நிதி ஒதுக்க முடியும்? வேலு: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் காலம் முடிந்து விட்டதா; பரிந்துரை செய்ததா; பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்? அமைச்சர் பன்னீர்செல்வம்: அந்த குழுவிற்கு வழங்கப்பட்ட, மூன்று மாத கால அவகாசம் முடிந்து விட்டது. மீண்டும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. துரைமுருகன்: மூன்று பேர் குழு அமைத்தீர்கள். அதில், இருவர் ராஜினாமா செய்து விட்டனர். ஒருவர் மட்டும் என்ன செய்யப் போகிறார்?இதற்கு ஆளுங்கட்சி தரப்பில், பதில் எதுவும் கூறப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here