இந்திய நீதிமன்றங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே செயல்படுகிறதோ என்று மக்களை நினைக்கும் வகையில் கபாலி திரைபட வழக்கில் அதிவிரைவாக செயல்பட்ட சென்னை உயர்நீதிமன்றம்.
ஒரேநாளில் 200 இணையதளங்களை கபாலி திரைபடத்திற்காக முடக்கியது சென்னை உயர்நீதிமன்றம்
லஞ்சம் வாங்கி பிடிபடும் ஒரு அதிகாரியின் மீது கொடுக்கப்படும் தீர்ப்பில் இதே வேகம் இல்லையே ...
சாராயக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் தீவிரமாக போராடினால் இவ்வளவு வேகம் இல்லையே .
ஆனால் ஒரு தனிமனிதன் தன்னுடைய தனி இலாபத்திற்காக ஒரு மனு அளிக்கப்பட்டால் அது உடனே தீர்ப்பாகி அனைத்து இணையங்களையும் முடக்க உத்தரவு விடப்படுகிறது ..
இளைஞர்களே இப்படத்தின் நுழைவுச்சீட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டால் புகார் அளியுங்கள் உடனே தீர்ப்பு வந்து படத்தை முடக்குகிறார்களா என்று பார்ப்போம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக