இன்றைய முக்கிய செய்திகள் 02/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய முக்கிய செய்திகள் 02/08/2016


📡பிஎஸ்என்எல் இணையதள வேகம் அதிகரிப்பு

சென்னை : தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட துணை பொது மேலாளர் எம்.எஸ்.திரிபுரசுந்தரி நேற்று வெளியிட்டுள்ள ெசய்திக் குறிப்பு: அகன்ற அலைவரிசை இணையதள சேவைகளை அளவில்லா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பிறகு இணையதள சேவையை பயன்படுத்தும்போது பதிவிறக்க வேகம் குறைந்து விடும். ஆனால் அப்படி குறைக்கப்படும் பதிவிறக்க வேகத்தை இனி 512கேபி யில் இருந்து ஒரு எம்பியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 



📡வலைதளங்களில் படம் வெளியாவதை தடுக்க என்ன வழி? கபாலி பட லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்கு செலவு செய்யவேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து


📡தமிழக பிரச்னைகளை வலியுறுத்தி தமாகா இளைஞரணி சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, தமாகா இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை (ஆக.3) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.



📡பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை

பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக சென்னையில் பண மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



📡தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல், விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்; கருணாநிதி வலியுறுத்தல்


📡மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1.84 உயர்வு டீசலை போல கியாஸ் விலையையும் மாதந்தோறும் உயர்த்த மத்திய அரசு முடிவு



📡இயற்கை உணவுகளையே மாணவர்கள் உண்ண வேண்டும்'

வேக வைத்த கடலை, பயறு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான, உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத, இயற்கை உணவு பொருள்களை மாணவர்கள் உண்ண வேண்டும் என்று ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக். பள்ளி முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன் கூறினார்.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், பலகாரங்கள் நிறைந்த உணவுத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், காயத்ரி ராமச்சந்திரன் பேசியதாவது:-

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் "ஜங் புட்ஸ்' என்றழைக்கப்படும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பதால் இளவயதில் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைத் தடுக்கலாம்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📡அம்மா மருந்தகங்களால் தனியார் கடைகளில் விலை குறைப்பு: செல்லூர் ராஜூ

அம்மா மருந்தகங்களால் தனியார் மருந்துக் கடைகளில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.



📡சவுதியில் தவிப்போரை மீட்க தீவிர நடவடிக்கை; சுஷ்மா சுவராஜ் உறுதி

புதுடில்லி: ''சவுதியில் தவிக்கும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு, தேவையான உணவு வழங்கப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன,'' என, பார்லிமென்ட்டில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.


📡வேறு கட்சியில் சேராதவரை சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் 'கட்சி சாரா' எம்.பி.

டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா வேறு ஒரு கட்சியில் சேராதவரை ராஜ்யசபாவில் கட்சி சாராத எம்.பி.யாக செயல்பட முடியும் என்கிறது விதிகள்.



📡ஆந்திர வனப்பகுதியிலும் தேடுகிறார்கள்: மாயமான விமானத்தில் நீருக்கடியில் இருப்பிடத்தை காட்டும் கருவி இல்லை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் குறித்து அதிர்ச்சி தகவல்கள்



📡குற்றாலம் சாரல் விழா: நாய் கண்காட்சியில் 111 நாய்கள் அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சிப் போட்டியில் 111 நாய்கள் அணிவகுத்தன.

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இக்கண்காட்சியில், திருநெல்வேலி, தூத்துக்குடி,விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ராஜபாளையம், கன்னி, பக், பாக்சர், டாஸ்கண்ட், பிட்புல், கிரேட்டன், லேபரடார், டால்மேஷன், டாபர் மேன், கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், மொகல்கவுண்ட், கேரவன்கவுண்ட், சிப்பிப்பாறை, பொமரேனியன், செயின்ட் பெர்னார்டு ஆகிய 19 வகையிலான 111 நாய்கள் பங்கேற்றன.

இதில், கன்னி முதலிடத்தையும், டால்மேஷன் இரண்டாமிடத்தையும் பெற்றன.



📡தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்: சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



📡பாரிக்கர் மீது பார்லியில் கடும் விமர்சனம்

புதுடில்லி : மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பொறுப்பற்ற பேச்சுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பார்லியில் கடும் விமர்சனம் செய்தன.நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், நடிகர் அமீர் கானை மறைமுகமாக சாடினார். மனோகர் பாரிக்கர் அமீர்கான் குறித்து பேசிய கருத்துக்கு பார்லியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ''பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு தக்க பாடம் கற்பிக்கப் போவதாக, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் எச்சரித்துள்ளார். எங்களை போன்றோருக்கு, எந்த வகையில் அவர் பாடம் கற்பிக்கப் போகிறார் எனக் கூறவேண்டும்,'' என்றார்.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், ''இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், நாட்டில் பாதுகாப்பின்மையை பரப்புகிறார்,'' என்று குற்றம் சுமத்தினார்.



📡மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது தவறில்லை - ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி

டெல்லி: தேசிய விளையாட்டு ஆணையம் வழங்கிய உணவில் ஊக்கமருந்து இருந்தது. விடுதியில் வழங்கப்பட்ட உணவில் ஊக்கமருந்து கலந்திருந்தது தெரியாமலேயே அவர் உணவை உட்கொண்டார். மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது எந்த தவறும் இல்லை என்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.


📡தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் இரண்டு நாள்களாக தத்தளித்த 7 மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.




📡தாய் - மகன் துண்டு துண்டாக வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட நிலையில் பெண் மற்றும் மூன்று மாத குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.



📡சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திரா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

விஜயவாடா: இன்று ஆந்திரா முழுவதும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனையடுத்து அம்மாநிலம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளது மற்றும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. 



📡தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: 'தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல இடங்களில், நேற்றிரவு லேசான மழை பெய்தது. சில இடங்களில் சற்று பலத்த மழை பெய்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 'இது வெப்ப சலனத்தால் ஏற்பட்ட மழை; இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், 'கர்நாடகா, கேரள மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாகவும், இந்த மழை இருக்கலாம். வங்கக் கடலில், ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு பாதிப்பு வராது' என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.



📡ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. இதில், சர்வதேச யோகா நிபுணர் பாபா ராம்தேவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

8-ஆவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது



📡மகாராஷ்டிராவை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை

மும்பை : மகாராஷ்டிராவை இரண்டாக பிரித்து விதர்பாவை தனி மாநிலமாக உருவாக்கும் திட்டம் மாநில அரசுக்கு இல்லை என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.




📡புண்ணியம் பெருகும் ஆடிப்பெருக்கு!

சென்னை: ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 18ம் பெருக்கு என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.



📡வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன துறை மூலம் பிரச்சாரம்

கேரளா: 'பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அணிங்க - பெட்ரோலை இலவசமாக பெறுங்க' என்று கொச்சினில் தொடங்கப்பட்ட மோட்டார் வாகன துறை மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. 



📡மேகாலயா மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் தாமதம்: மக்கள் ஆவேசம்

மேகாலயா: மேகாலயா மாவட்டத்தில் உள்ள துரா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் துன்பத்தில் அவதியுற்ற மக்களுக்கு நிவாரணப் பணிகளில் தாமதமாக நடைபெற்றதால் பொதுமக்கள் கொந்தளிப்பு தெரிவித்துள்ளனர். 



📡7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.



📡நடுரோட்டில் பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை!: இதுவரை நடவடிக்கை இல்லை!

இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அரியானா மாநில அரசை, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் நேற்று முன்தினம் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்தது ஒரு கும்பல்.


📡திருச்சி சிவாவுடனான மோதலை 'மேடம்' கனிமொழி மூலம் கருணாநிதிக்கு தெரிவித்தேன்... சசிகலா புஷ்பா


📡காவிரி கரையோரம் கலைகட்டியது ஆடிப்பெருக்கு: கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பவானி: காவிரி பாசன பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை என்பதால் டெல்டா பகுதிகளில் கொண்டாட்டம் கலையிழந்து காணப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் தான் இந்த ஆடிப்பெருக்கு விழா ரொம்ப பிரசித்தியாக கொண்டாடப்படும் விழாவாகும். ஆடியில் காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவது வழக்கம். அந்தப் புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக தான் ஆடி 18ஐ ஆடிப்பெருக்கு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வரவில்லை என்ற போதிலும் கூட காவிரி கரையோர பகுதிகளில் வழக்கமான உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழாவானது தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.


📡புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் மோடி இன்று சந்திப்பு

புதுடில்லி : புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 172 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று (02-08-2016) சந்தித்து கலந்துரையாடுகிறார்.2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்குப் பின் 172 அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர். மத்திய அரசின் 48 துறைகளில் துணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு டில்லியில் முதல் 3 மாதங்களுக்கு மத்திய அமைச்சகங்கள், துறைகளின் முக்கியத் திட்டங்கள், கொள்கைகள் தொடர்பான பணிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 172 பேரையும் சந்தித்து இன்று கலந்துரையாடவுள்ளார்


📡ஹைதெராபாத்தில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
ஹைதெராபாத், செகந்தராபாத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


📡தங்கம் பவுனுக்கு ரூ.96 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.23,944-க்கு விற்பனையானது.

சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ. 2,933 என்ற அளவில் விற்பனையானது. ஆனால், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.230 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,200-க்கு விற்பனையானது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
திங்கள்கிழமை மாலை விலை நிலவரம் (ரூபாயில்):

ஒரு கிராம் தங்கம் 2,993

ஒரு பவுன் தங்கம் 23,944

ஒரு கிராம் வெள்ளி 52.60

ஒரு கிலோ வெள்ளி 49,200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here