📡🌍காலை செய்திகள் 🌍📡
📡🌍08\08\16🌍📡
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌍கீழக்கரை அருகே பரபரப்பு விசாரணை கைதி மர்மச்சாவு : போலீஸ் குவிப்பு
ராமநாதபுரம் : கீழக்கரை அருகே விசாரணை கைதி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே மாயாகுளத்தை சேர்ந்தவர் சேக் அலாவுதீன் (28). இவரை வழிப்பறி வழக்கு தொடர்பாக, ஏர்வாடி தர்கா ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, நேற்று காலை கைது செய்தார். பிற்பகலில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறி உடலை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
🌍மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதில் சிக்கல்
விருதுநகர்: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 70 சதவீத வனச் சரகர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அரிய வகை மூலிகைச் செடிகளும், மரங்களும் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, மான் போன்ற விலங்குகளும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை வனங்களைப் பாதுகாப்பது, மரங்களை வெட்டுவோரைக் கைது செய்வது, விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்து அவர்களைக் கைது செய்வது, விலங்கினங்களுக்கு உணவுக்காகத் தேவைப்படும் செடிகளை வளர்ப்பது, தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது போன்ற பணிகளை வனச் சரகர் மேற்பார்வையில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
🌍முடங்கிக் கிடக்கும் பனைபொருள் பயிற்சி மையம்
கடலூரில் 5 மாநிலத்தவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த மண்டல பனைபொருள் பயிற்சி மையம், மத்திய அரசின் நிதியுதவி இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது.
🌍வைஷ்ணவி தேவி யாத்திரை நிறுத்தம்
ஜம்மு : தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அங்கு தொடர் மழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் காயமடைந்த 10 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான். இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மழை நீடிப்பதால் பக்தர்களின் யாத்திரை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
🌍பின்தங்கிய பகுதியில் வசிப்போருக்காக அந்தமான் தீவில் மக்களை ஏற்றி வர விமானப்படை விமானம்
கொல்கத்தா : அந்தமான் நிகோபர் தீவின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து மக்களை ஏற்றி வரும் பணியை விமானப்படை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மேற்ெகாள்ள உள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் உள்ள சில பகுதிகளுக்கு பவன்ஹான்ஸ் ஹெலிகாப்டர்கள் மூலமாக தான் தற்போது சென்று வர முடியும். இந்நிலையில் அந்தமான் நிகோபர் தீவின் பின்தங்கிய பகுதிகளுக்கு விமானப்படை மூலம் விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
🌍25 அரிய இன மான்கள் பலி
ஐதராபாத் : தெலங்கானா மாநிலம், ஐதராபாத், மகபூப்நகர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் அருகே கும்மடம் கிராமம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் சுமார் 25 மான்கள் வயல்வெளியில் இறந்துகிடந்ததை கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
முதல்கட்ட விசாரணையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக யாரோ மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
பூச்சிகொல்லி மற்றும் ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்டு பயிர் வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து வந்த மான்கள் மக்காசோள பயிரை மேய்ந்ததால் உயிரிழந்துள்ளதாக ெதரியவந்துள்ளது.
🌍தென்காசி அருகே மினி வேன்- பேருந்து மோதல்: தம்பதி உள்பட 4 பேர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே மினி வேனும், அரசுப் பேருந்தும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில், மதுரையைச் சேர்ந்த தம்பதி உள்பட 4 பேர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
🌍தமிழகம் முழுவதும் மகளிர் பேருந்து சேவை
பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஏதுவாக, தமிழகம் முழுவதும் மகளிர் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
🌍கேரளம்: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுகிறது மாணி கட்சி
கேரள மாநில காங்கிரஸ் கூட்டணிக்கான ஆதரவை அம்மாநில நிதித் துறை முன்னாள் அமைச்சர் மாணியின் கட்சி விலக்கிக் கொள்வதென முடிவு செய்துள்ளது.
🌍காஷ்மீரில் 30-ஆவது நாளாக தொடரும் ஊரடங்கு உத்தரவு
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீடித்துள்ளதால் அங்கு 30-ஆவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
🌍தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்!: பிரதமர் மோடி வேண்டுகோள்
தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், தலித்துகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.
🌍2 முறை என்னைக் கொல்ல முயற்சி: சுப்ரமணியன் சாமி
புதுடில்லி : நெருக்கடி நிலை காலத்தில் தன்னைக் கொல்ல இரண்டு முறை முயற்சிகள் நடந்ததாக பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சுப்பிரமணியன் சாமி பேசியதாவது: நெருக்கடி நிலை காலத்தில், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் உத்தரவின்பேரில், இரண்டு முறை முயற்சி செய்யப்பட்டது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அப்போதைய நாட்களில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளிலிருந்து இதனை உறுதி செய்து கொள்ளுங்கள்
🌍மீஞ்ஞர் அருகே விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
மீஞ்ஞர்: மீஞ்ஞர் அருகே பட்டமந்திரியில் டிராக்டர் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த சுதாகர் (30), சரண்ராஜ (28) இருவரும் உயிரிழந்தனர்.
🌍ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை 620 படகுகளிலும், மண்டபம் பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட படகுகளிலும் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சகாயம், தட்சிணாமூர்த்தி, சேகர், சேதுராஜன் ஆகியோரின் படகுகளையும், மண்டபம் பகுதியை சேர்ந்த சில மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனராம்.
🌍மத்திய பிரதேசத்தில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 6 பேர் படுகாயம்
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலம், சாட்டார்புர் மாவட்டத்தில் உள்ள ஜடசங்கர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் இந்த இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
🌍பிகாரில் 5 மாவோயிஸ்ட்டுகள் கைது
பிகார் மாநிலம் முஸாபூர் மாவட்டத்தில் 5 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தின் முஸாபர்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, தேடுதல் வேட்டையில் முக்கிய மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🌍மெக்ஸிகோ நிலச்சரிவு: 38 பேர் பலி
மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 38 பேர் பலியாகினர்.
🌍சட்டசபையில் இன்று மீன் வளம், பால் வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்
சட்டசபையில் இன்று மீன் வளம், பால் வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்
2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதம் 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. 29-ந் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் உரை ஆற்றினார். இம்மாதம் 1-ந் தேதி முதல் அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக, செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.
இன்றைய சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது.
🌍நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் பலாத்காரம்: போலீசார் அறிக்கை: முதல்வர் அதிர்ச்சி
நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் பலாத்காரம்: போலீசார் அறிக்கை: முதல்வர் அதிர்ச்சி
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான டெல்லி போலீசாரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பாலியல் பலாத்கார வழக்குகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 706 வழக்குகளும், 2013ல் 1636 வழக்குகளும், 2014ல் 2166 வழக்குகளும், 2015ல் 2199 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளை பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 6 மடங்கு உயர்ந்துள்ளது.
🌍மேக் இன் இந்தியா மேடையில் மட்டுமே: சிதம்பரம் குற்றச்சாட்டு
பெங்களூரு : மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவின் புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதிஅமைச்சரும், எம்.பி-யுமான சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மேக் இன் இந்தியா திட்டம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய ஒன்று. இந்த திட்டம் நாளை செயல்படும் என்பது குறித்த கேள்வி இல்லை. அது கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். ஆனால் இன்று மேக் இன் இந்தியா திட்டம் வேலை செய்யவில்லை. இன்று அது மேடைகளில் மட்டுமே நடைபெறுகிறது. யுகோ வங்கி தலைவர் ஆர்.கே.தாக்கர் தொழில்துறையில் முதலீடுகள் அதிகம் இல்லை என்று கூறியுள்ளார். இதிலிருந்து புதிய முதலீடுகள் உருவாகவில்லை என்பது தெரிகிறது என்றார்.
🌍 பழனி அருகே கோம்பைபட்டியில் படபிடிப்புக்காக அமைக்கப்பட்ட சூட்டிங் சேட் மரவீடு தீ பற்றி எரிந்து பல லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் தீயனைப்பு துறையினர் தீயை அனைத்து வருகின்றனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
🌍 காஞ்சிபுரம் - தாம்பரம் காஞ்சிபுரம் சாலையில் மண்ணிவாக்கம் , படப்பை பகுதிகளில் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி , அலுவலகம் , மருத்துவமனை செல்வோர்களுக்கு மாற்று பாதை ஏற்படுத்தாததால் போக்குவரத்து கடும் பாதிப்பு
🌍குமரி - குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மீது போதை கும்பல் சரமாரி தாக்குதல். தடுக்க முயன்ற பொது மக்களையும் தாக்க முயன்றதால் போதை வாலிபர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாறி மாறி தாக்குதல் .இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை .
🌍நாகர்கோவில் அருகே வல்லன் குமாரவிளை முத்தாரம்மன் கோவில் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலி, விளக்கு, உண்டியல் பணம் கொள்ளை .
🌍தங்கம் & வெள்ளி
விலை நிலவரம்
22 காரட் 1கிராம்
2965
24 காரட் 10கிராம்
31710
வெள்ளி 1 கிலோ
50600
பார் வெள்ளி 1 கிலோ
47255
http://www.sivakaaiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக