முக்கிய செய்திகள் 09/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முக்கிய செய்திகள் 09/08/2016


        http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com  
        

🌍கிரானைட் முறைகேடு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு: குவாரி உரிமதாரர்கள் பதிலளிக்க உத்தரவு

கிரானைட் முறைகேடு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு கிரானைட் குவாரி உரிமதாரர்கள் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

🌍திருப்பூரில் ரூ. 570 கோடி பறிமுதல் விவகாரம்: முதல்கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ

திருப்பூரில் கடந்த மே மாதம் மூன்று கன்டெய்னர்களில் இருந்த ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான முதல்கட்ட விசாரணையை (Preliminary enquiry) சிபிஐ திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 4-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஐ தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

🌍பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 75 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

🌍இடையே, வாராந்திர சரக்கு ரயில் போக்குவரத்தை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நேற்று துவக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது: நடப்பு, 2016 - 17ம் நிதியாண்டு ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் குறைப்பு உட்பட, பல்வேறு சீர்திருத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இத்துடன், மேலும் முக்கிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வேயில், சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக, சரக்கு ரயில் போக்குவரத்துக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு, 'கார்கோ எக்ஸ்பிரஸ்' சரக்கு ரயில்கள், குறித்த நேரத்திற்கு முன்பாகவே, சரக்குகளை கொண்டு போய் சேர்த்துள்ளன என்பது பாராட்டத்தக்கது.
ரயில்வே வருவாயில், மூன்றில் இரு பங்கு, சரக்கு ரயில் போக்குவரத்தில் கிடைக்கிறது; இது, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

🌍பசுக்கள் உயிரிழந்த சம்பவம்; பிரதமர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுடில்லி : பசுக்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக ராஜஸ்தான் அரசு மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்., உறுப்பினர் பிரமோத் திவாரி வலியுறுத்தினார்.இதுகுறித்து காங்., உறுப்பினர் பிரமோத் திவாரி ராஜ்யசபாவில் பேசியதாவது: ராஜஸ்தானில், அரசு நடத்தும் பசுக்கள் காப்பகத்தில், பசியால், 1,000 பசுக்கள் உயிரிழந்து உள்ளன. போலி பசு பாதுகாவலர்களை தண்டிக்க வேண்டுமென, பிரதமர் மோடி பேசி வருகிறார். பசுக்கள் இறந்தது தொடர்பாக, ராஜஸ்தான் அரசுக்கு எதிராக, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

🌍ரியோ ஒலிம்பிக் இந்திய வீரர்-வீராங்கனைகள் இன்று பங்கேற்கும் போட்டிகள்

ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப் போட்டியில் இன்று இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆக்கி, வில்வித்தை, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல்

துடுப்பு படகு: டட்டு பாபன் போகனல் (ஆண்களுக்கான 'சிங்கிள் ஸ்கல்' கால் இறுதி சுற்று), மாலை 5 மணி.

ஆக்கி: ஆண்களுக்கான லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவுடன் மோதல், இரவு 7.30 மணி

வில்வித்தை: ஆண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், நேபாள வீரர் ஜித் பகதூருடன் பலப்பரீட்சை, இரவு 8.06 மணி.

துப்பாக்கி சுடுதல்: ஹீனா சித்து (பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல்) தகுதி சுற்று: மாலை 5.30 மணி, இறுதி சுற்று: நள்ளிரவு 12.25 மணி

🌍தேசியக் கீதத்துக்கு தடை விதித்த தனியார் பள்ளிக்கு சீல்: நிர்வாகி கைது

உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் பள்ளி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

🌍இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இரு அணிகளும் மழையினால் போட்டி டிராவில் முடிந்தது.

இன்று 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

🌍ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி

ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

🌍அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை தேவை'

புதுடில்லி : அயோத்தி விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் வகையில், அதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கில், தினசரி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ., உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி கோரிக்கை விடுத்தார்.இதுகுறித்து ராஜ்யசபாவில் பேசிய பா.ஜ., உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி பேசியதாவது: ராமர் கோவில் கட்டுவதற்கு, சட்டரீதியில், கோர்ட்டுகள் மூலம் தக்க தீர்வு காணப்படும் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சுப்ரீம் கோர்ட்டில், தினசரி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு, அனைத்துக் கட்சிகளும் சம்மதித்துள்ளன.எனவே, ஐகோர்ட்டில் அயோத்தி வழக்கு நடைபெற்றபோது மத்திய அரசு செய்ததைப் போலவே, சுப்ரீம் கோர்ட்டுக்கும் உரிய அதிகாரிகளை அனுப்பி அவ்வழக்கு தினமும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம், அயோத்தி பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

🌍அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனு

நாகர்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

🌍கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் மாயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலையில் சென்ற 15 பேரும் அன்று இரவே கரை திரும்பி இருக்க வேண்டும். கடலோரக் காவல் குழுமம், குமரி மாவட்ட மீன்வள உதவி இயக்குனர்ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டு 4 நாட்களாக நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா என சந்தேகம் அடைந்துள்ளது. 

🌍சென்னையில் மனைவியை காரில் தீ வைத்து எரித்த கணவன்

சென்னை: 30 வயதுடைய டாக்சி டிரைவர் ஒருவர், தனது மனைவியை காரில் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்சி டிரைவரான ஜெயபாலுக்கு, பிரேமா(29) என்ற மனைவியும், 2 சிறிய மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நந்தனம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது பிரேமாவுக்கும், ஜெயபாலுக்கும் விவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயபால், தனது மனைவி மீது பெட்ரோல் உற்றி தீ வைத்துவிட்டு,காரில் இருந்து தப்பித்துவிட்டார். இதனையடுத்து பிரேமா, காரின் கண்ணாடியை உடைத்து தனது இரு மகன்களையும் வெளியே வீசினார். ஆனால் பிரமோவால் தப்பமுடியவில்லை, இதனால் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

🌍சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது டிரக் மோதியது: 7 பேர் பலி

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ஒரு டிரக் வேகமாக வந்து சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 

🌍கொல்கத்தாவில் கனமழை: வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நெரிசல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் முக்கிய பகுதியான தேசப்பிரிய பார்க் மற்றும் சரத் போஸ் போன்ற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. 

🌍சேரன்மகா
தேவியில் அரசு ஊழியர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசு ஊழியரை மர்ம நபர்கள் திங்கள்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதைக் கண்டித்து உறவினர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சேரன்மகாதேவி கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் செல்லையா (50). பொதுப்பணித் துறை ஊழியர். இவர், அப்பகுதி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடை விழாவுக்கு திங்கள்கிழமை இரவு சென்றாராம்.

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செல்லையாவை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த செல்லையா, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

🌍சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

சென்னை: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சோழவரத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் இருந்த செல்வம் உயிரிழந்துள்ளார். செல்வம் உயிரிழந்துள்ளதை அடுத்து சோழவரம் அருகே காரனோடையில் 2 அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. 

🌍16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் இரோம் ஷர்மிளா

ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட மணிப்பூர் மாநில "இரும்புப் பெண்' இரோம் சானு ஷர்மிளா (44) இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவுள்ளார்.

🌍பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜோதிலட்சுமி. பெரியஇடத்து பெண், தலைவன்,சேது உள்ளிட்ட படங்களில் ஜோதிலட்சுமி நடித்துள்ளார். 


🌍ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: 1 படகையும் சிறைபிடித்து இலங்கை படையினர் அட்டூழியம்

புதுக்கோட்டை: ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசம் கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து நேற்று 200க்கும் மேற்பட்ட விசைப்படகில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கடலுக்குச் சென்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 1 படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் மீன்பிடித்து சென்றனர். 


🌍காஷ்மீர் பிரச்னையில் வாஜ்பாய் வழியில் செயல்பட வேண்டும்: பிரதமருக்கு மெஹபூபா வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்க, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

🌍வங்கி கணக்கில் இருந்த பணத்தை காணும்... கண்டுபிடிச்சு கொடுங்க: கலெக்டரிடம் மனுக்கொடுத்த தம்பதி

வங்கி கணக்கில் இருந்த பணத்தை காணும்... கண்டுபிடிச்சு கொடுங்க: கலெக்டரிடம் மனுக்கொடுத்த தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு நீதி நாளில் ஏராளமானவர்கள் மனுக்கள் கொடுக்க வந்தனர். அதே போல கீரனூர் அருகில் உள்ள குளத்தூர் தாலுகா மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மேனகா தனது கணவர் சின்னுவுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தார்.

🌍மகப்பேறு மசோதா பார்லி.,யில் இன்று தாக்கல்

புதுடில்லி : மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா, பார்லி.,யில் இன்று(09-08-16) தாக்கல் செய்யப்படுகிறது.அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு தற்போது 12 வார காலம் (3 மாதங்கள்) மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இன்று தாக்கலாக உள்ள மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதாவின் படி, தனியார் துறை உட்பட அனைத்துத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கும், 26 வாரங்களுக்கு(6 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு அதிகரிக்க வழி வகை செய்யும்.மேலும், பச்சிளங் குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு, 16 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பது, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில், குழந்தைகள் காப்பகம் அமைப்பதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற உள்ளன.

🌍மாவோயிஸ்டுகள் 35 பேரின் புகைப்படத்தை வெளியிட்டு தேடும் கேரள போலீஸார்

தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தலைமறைவாக உள்ள மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 35 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு கேரள போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

🌍கம்பம் அருகே புளியந்தோப்பில் கருகிய நிலையில் பெண் சடலம்!

கம்பம் அருகே புளியந்தோப்பில் கருகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள அண்ணாபுரத்தில் புளியந்தோப்பில், உடல் கருகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🌍ஆந்திராவுக்கு இழப்பீடு தேவை: அருண் ஜெட்லி

ஆந்திர மாநிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் பேசியதாவது: ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட காலம், வருவாய் மற்றும் நிதி தொடர்பான பிரச்னைகள், அம்மாநிலத்துக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளன; அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; இப்பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

🌍தலித் மக்களின் ஓட்டுக்காக நாடகமாடும் மோடி': மாயாவதி குற்றச்சாட்டு

புதுடில்லி, ''தலித் மக்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளது, தலித் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கான அரசியல் நாடகமே,'' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில், தலித் மக்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டித்து, பிரதமர் மோடி பேசியுள்ளார். இதுகுறித்து, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி கூறியதாவது:
இத்தனை நாள், கும்பகர்ணன் போல் துாங்கி கொண்டிருந்தனர். உ.பி., உள்ளிட்ட சில மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், திடீரென முழித்துக் கொண்டுள்ளனர். தலித் மக்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளது, வெறும் ஓட்டு அரசியலே.
தலித் மக்களின் ஓட்டு, தங்களுக்கு கிடைக்காது என்பதால், அவர்களுடைய ஓட்டுகளை பெறுவதற்காக, இதுபோன்று மோடி பேசி உள்ளார்.
மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த இந்த இரு ஆண்டுகளில், முதலில், முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தற்போது, தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். இதுகுறித்து, பார்லிமென்டில் பலமுறை கேள்வி கேட்டும், மோடி மவுனமாக இருந்தார்.
உங்களிடமிருந்து தலித் மக்கள் அனுதாபத்தை கேட்கவில்லை. தலித்
மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

🌍சென்னை பல்லாவரத்தில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் காதலிக்க வற்புறுத்தியதால் வாலிபருக்கு செருப்படி

ஆத்திரத்தில் பெண்ணின் கையை பிலேடால் அருத்ததால் பரபரப்பு மேலும் அந்த அந்த வாலிபரை அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மலையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணா (வயது-25)  அதே ஊரை சேர்ந்த பெண் சத்தியா (வயது-25) இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒருவாரமாக சரிவர பேசாத்தால்  இன்று பல்லாவரம் சந்தை சலையில் அந்தபெண்ணிடம் காதலிக்குமாறு அந்த நபர் கட்டாயப்படுத்தவே பெண் செருப்பால் அடித்ததாக்வும் அதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண்ணின் கையில் பிலேடால் வெட்டிவிட்டு தப்பியோட்டம் காயம் அடைந்த அப்பெண் தனியார் மருத்துவமனையில் சிக்கிசை பெற்றார். பொது இடத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை.

🌍ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1-க்கு பயண காப்பீடு: செப்.1 முதல் புதிய முறை அமல்

_ஐஆர்சிடிசி இணையம் வாயிலாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1 ப்ரீமியம் தொகை செலுத்தி பயணக் காப்பீடு செய்துகொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல் படுத்துகிறது_.

🌍குரூப் 4 தேர்வு  அறிவிப்பு .

காலியிடங்கள் - 5451

இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404

விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11

தேர்வு நாள் - நவம்பர் 6

மேலும் விபரங்கள்
www.tnpsc.gov.in

🌍சந்தேகத்தின் அடிப்படையில் தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுபுள்ளி வைக்க ஆந்திராவிடமிருந்து திருப்பதியை தமிழகம் மீட்க வேண்டும்!

- இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தல்.

🌍தங்கம் பவுனுக்கு ரூ.176 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.23,544-க்கு விற்பனையானது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து, ரூ.2,943-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47,280-க்கு விற்பனையானது.

திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

ஒரு கிராம் தங்கம் 2,943

ஒரு பவுன் தங்கம் 23,544

ஒரு கிராம் வெள்ளி 50.60

ஒரு கிலோ வெள்ளி 47,280
http://www.sivakasiteacherkaruppasamy. blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here