நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன் டாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கனடா (4,700 பில்.டாலர்), ஆஸ்திரேலியா (4,500பில். டாலர்), இத்தாலி (4,400 பில். டால்ர்), ஆகிய நாடுகள் முறையே 8,9, 10-வது இடத்தில் உள்ளன.
மொத்த தனிநபர் சொத்து விவரத்தில் 48,900 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளது. 4-ம் இடத்தில் யு.கே, 5-ம் இடத்தில் ஜெர்மனி, 6-ம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
நபர்களின் நிகர சொத்து மதிப்பு என்ற அளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரது அசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தக வருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசு நிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை. இந்தியா டாப் 10-ல் இருக்கக் காரணம் அதன் மக்கள் தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட ஆஸ்திரேலியா டாப் 10-ல் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில் சீனாவே அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாக விளங்குகிறது என்கிறது இந்த அறிக்கை.
கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக