🌍📡மதிய செய்திகள் 📡🌍
🌍📡13\ 08\16📡🌍
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
🌍திண்டுக்கல் காப்பகத்தில் தஞ்சமடைய குவியும் முதியோர்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ள நகர்ப்புற வீடற்ற ஏழைகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட மற்றும் உதவித்தொகை முதியோர் அதிகளவில் தஞ்சமடைந்து வருகின்றனர். குறைவான மானிய தொகை வழங்குவதால் இவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கான தங்கும் காப்பகம் உள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும், இக்காப்பகத்தை டீட் அறக்கட்டளை நிறுவனர் மகேஸ்வரன் என்பவர் நிர்வகித்து வருகிறார். விதிமுறைப்படி 60 பேர் மட்டுமே காப்பகத்தில் தங்கியிருக்க வேண்டும். இங்கு கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் இரவில் தங்கி கொள்ளலாம். இவர்களுக்கு இரவு உணவு வழங்க குறைந்த பட்ச மானியத்தொகை அரசால் வழங்கப்படுகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக கைவிடப்பட்ட ஆண், பெண் முதியோர்களின் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் தாங்களாகவே வந்து இங்கு தங்குகின்றனர். இவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க வேண்டி இருப்பதால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது.
🌍தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் ஜோர்
உத்தமபாளையம் : கேரளாவிற்கு ரேஷன்அரிசி கடத்தலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சிவில்சப்ளைத்துறை பறக்கும்படை, அதிகாரி இல்லாததால் முடங்கி கிடக்கிறது. இதனால் ரேஷன் அரிசி கடத்தில் கனஜோராக நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி என 5 தாலுகாக்கள் உள்ளன. இவற்றில் 375க்கும் மேற்பட்ட ரேஷன்கடைகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கூலி தொழிலாளர் குடும்பங்கள், ரேஷன்கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியையே நம்பி உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மூட்டைமூட்டையாக கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. தமிழகத்தின் விலையில்லா ரேஷன் அரிசி கேரளாவில் 1 கிலோ ரூ.15 வரை விலை போகிறது.
🌍தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 11 பேருக்கு குண்டாஸ்
சென்னை: சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 11 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்து வருகின்றனர். அந்த வகையில் கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கண்ணகி நகரை சேர்ந்த ராஜேஸ் (எ) கிளி ராஜேஸ் (33), வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த வெங்கடேசன் (28), கூடுவாஞ்சேரியை சேர்ந்த பிரகாஷ் (எ) அப்பளம் பிரகாஷ் (37), எண்ணூரை சேர்ந்த குட்டி (எ) தியாகராஜன் (25), கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (40), அஜித்குமார் (22), மாத்தூரை சேர்ந்த வெள்ளை பால்ராஜ் (60), சாத்தன்குளத்தை சேர்ந்த அந்தோணி (36), தாளையூத்து பிரவின்ராஜ் (24), ராஜபாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (30), வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் (எ) ஓட்ட தினேஷ் (29) ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
🌍பொதுமக்களால் பிடித்து கொடுக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் இருந்து கொள்ளையன் தப்பி ஓட்டம்
தண்டையார்பேட்டை: பொதுமக்களே மடக்கி பிடித்த வழிப்பறி கொள்ளையன் ராயபுரம் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போலீசார் உடந்தையாக இருந்தார்களா என அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ராயபுரம் எம்.எஸ்.கோயில் தெரு வழியாக நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம், வாலிபர் ஒருவர் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நபர் கூச்சலிட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்து, ராயபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த உதயகுமார் (25) என்பதும், வழிப்பறி கொள்ளையன் என்பதும் தெரிந்தது
இவர் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்றும் தெரிந்தது. இதனால், உதயகுமாரை விசாரிப்பதற்காக காவல் நிலையத்தில் அமர வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை உதயகுமார் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடினார். போலீசார், அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
🌍மின் திருட்டில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிக்கு 1 லட்சம் அபராதம்: அதிகாரிகள் அதிரடி
திருவொற்றியூர்: எண்ணூர் பகுதியில் உள்ள வீடுகளில் மின் திருட்டில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உள்பட 3 பேரிடம் 2,86,000 அபராதம் விதிக்கப்பட்டது.
🌍சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி
சென்னை: சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 10 ம் தேதி, ராணுவ பயிற்சி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செப்டம்பர் 9ம் தேதி இரவு சென்னை வர உள்ளார். பின்னர் 10 ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ பயிற்சி அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் லெப்டினெட் ஜெனரல் பேபி மேத்யூஸ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்றைய தினமே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விமானம் மூலம் டில்லி திரும்ப உள்ளார்.
🌍திருத்தணி அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி
திருவள்ளூர்: திருத்தணி அருகே காவியராஜபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் சிறுவன் யுவராஜ்.
🌍திண்டிவனத்தில் அரசு ஊழியர் வீட்டில் 56 சவரன் நகை கொள்ளை
சென்னை: திண்டிவனத்தில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 56 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் விழாவுக்காக வெளியூர் சென்றிருந்த போது 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.3 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
🌍அசாம் : போலீஸ் ஸ்டேஷன் மீது பயங்கரவாத தாக்குதல்
கவுகாத்தி : அசாமில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அசாமில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
🌍3 நாள் தொடர் விடுமுறையால் கோயம்பேட்டில் குவிந்த பயணிகள்
சென்னை: 3 நாள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்ல பயணிகள் ஏராளமானோர் கோயம்பேட்டில் குவிந்தனர். ஆனால் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டனர்.
🌍வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற கொள்ளையடித்தேன்!: கவுன்சிலர் அதிர்ச்சி "வாக்குமூலம்"
கடலூர்:
"உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி 33 லட்சம் பணத்தை கொள்ளையடித்தேன்" என்று கொள்ளைக் கும்பல் தலைவரான கவுன்சிலர் "வாக்குமூலம்" அளித்துள்ளார்..
🌍அடுத்த ஆண்டு முதல் ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
🌍குஜராத் மாநிலத்தில் நாகப்பாம்புடன் செல்பி எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
🌍மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து- வேன் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
🌍வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
🌍18 வயதானவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்த கூடாது- ஹைகோர்ட்
🌍ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 70 பேர் கொண்ட 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
🌍சசிகலா புஷ்பா தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!'
மதுரை: சசிகலா புஷ்பாவின் தாயார் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
🌍டில்லிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடில்லி : டில்லியின் நொய்டா பகுதியைச் சேர்ந்த அமித் என்பவருக்கு ஆகஸ்ட் 11ம் தேதியன்று தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், ஆகஸ்ட் 15 அன்று டில்லி மற்றும் நொய்டாவில் குண்டுவெடிக்கும் என கூறப்பட்டுள்ளது.முதலில் இது யாராவது விளையாட்டாக செய்திருக்கலாம் என நினைத்த அமித், பின்னர் போலீசிடம் இது குறித்து தகவல் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் அது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து வந்த அழைப்பு என தெரிய வந்துள்ளது.
🌍வாகா எல்லையில் தாக்குதல் நடத்த சதி
லாகூர் : இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி வாகா எல்லைப் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தாலிபன் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான், இந்தியாவை எச்சரித்துள்ளது.இதனால் இரு நாடுகளும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் வாகா எல்லைக்குள் தாலிபன் அமைப்பைச் சேர்ந்த 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், தெக்ரிக் இ தாலிபன் அமைப்பினர் வாகா பகுதியில் ஆகஸ்ட் 13,14 அல்லது 15 அன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்
🌍முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய பொதுமக்களுக்கு வைகோ கோரிக்கை
சென்னை: முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 19 ம் தேமி போராட்டம் நடத்த உள்ளனர்.
🌍2011-16 அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 10 ஆயிரம் கொலைகள்: ராமதாஸ்
சென்னை: 2011-16 அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 10 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். உண்மையை மறைத்து விட்டு தமிழக மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக இணையதளத்தில் இருந்து குற்ற விவரங்களை அரசு நீக்கியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
🌍சென்னை தி.நகரில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்.,கட்சியினர் கைது
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
🌍சென்னை தி.நகரில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்.,கட்சியினர் கைது
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
🌍ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி... டிஜிட்டலில் வெளியாகிறது!
இன்றைய தமிழக முதல்வர் சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி திரைப்படம், 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது.
ஜெயலலிதா - முத்துராமன் நடித்து 1973 ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் சூரியகாந்தி. 150 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படத்தை தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
43 வருடங்களை கடந்து 44 ம் வருடத்தை தொட்டிருக்கும் சூரியகாந்தியின் கதைக்களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால் இந்த தலை முறையினரும் ரசிக்க கூடிய படமாக இருக்கும் என்பதால், மீண்டும் வெளியிடுவதாக படத்தின் இயக்குநர் முக்தா வி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
🌍பணி ஆணை வழங்கி 2 மாதமாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணிகள்
கருங்கல் : கருங்கல் அருகே பள்ளியாடி அந்திக்கடையில் இருந்து நட்டாலம் நேசர்புரம் வரை செல்லும் சாலை மற்றும் பள்ளியாடி வாழைத்தோட்டத்தில் இருந்து இடவிளாகம் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக செப்பனிடப்படவில்லை. இதில் பள்ளியாடி வாழைத்தோட்டத்தில் இருந்து இடவிளாகம் செல்லும் சாலையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன. இதனால் தினமும் 50க்கும் மேற்பட்ட கல்லூரி பஸ்கள் இந்த சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அத்துடன் 500க்கும் மேற்பட்ட வீடுகளும் இப்பகுதியில் உள்ளன. இந்த சாலையும், பள்ளியாடி அந்திக்கடையில் இருந்து நட்டாலம் நேசர்புரம் வரை செல்லும் சாலையும் மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது. சாலை பழுது காரணமாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவில் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.
இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கடந்த 5 மாதத்திற்கு முன் இந்த சாலை பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டது.
இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் இந்த சாலை பணிகளுக்காக கடந்த 2 மாதத்திற்கு முன் ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை சாலை பணிகள் தொடங்கவில்லை
🌍சென்னையில் அனைத்து விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்
சென்னை: சென்னையில் அனைத்து விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. திமுக,காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதநிதிகள் பங்கேற்றுள்ளனர். காவிரி நீரை பெற்றிட, அனைத்து விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்திட வலியுறுத்தியுள்ளனர்.
🌍கழிவுநீரை அகற்ற குழந்தைகளை பயன்படுத்தும் காப்பகம் : மனிதாபிமானற்ற செயல் என கண்டனம்
மதுரை: ஆதரவற்ற குழந்தைகளை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரையில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை அங்குள்ள குழந்தைகளை பயன்படுத்தி சுத்தம் செய்துள்ளனர். தொட்டியில் இருந்து கழிவுகளை வாளியில் வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பல தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
🌍கொலை, கொள்ளைகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது: ராமதாஸ் கண்டனம்
கொலை , கொள்ளைகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கொவை , கொள்ளை சம்பவங்களே தமிழகத்தின் அடையாளமாக உள்ளது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்
🌍ஜாதி, மத கலவரங்களுக்கு காரணமாகும் சமூகவலைதளங்கள் : ரங்கராஜ் பாண்டே ஆதங்கம்
கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார்.
🌍டெங்கு : டில்லியில் 2 பேர் பலி
புதுடில்லி : டில்லியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை டில்லியில் 171 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சலுக்கு ஜூலை 21 அன்று 17 வயது இளம்பெண் பலியான நிலையில், தற்போது டில்லி எம்எல்ஏ அமன்துல்லாவின் உறவினரான நர்கீஸ் (38) நேற்று பலியாகி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது டெங்கு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
🌍கின்னஸ் விசித்திரம் : சீனாவின் அசாத்திய சாதனை!!
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல்வேறு நாடுகளும் பதக்கங்களைக் குவித்து வரும் நிலையில் உள்நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு அசார்த்தியமாக கின்னஸ் உலக சாதனை ஒன்றைச் சீனா படைத்திருக்கின்றது.
🌍கூகுள் அறிவியல் கண்காட்சி இறுதியில் இரண்டு இந்திய இளைஞர்கள்..!
கூகுள் நிறுவனத்தின் ஆறாவது "கூகுள் அறிவியல் ஆண்டு 2016"-ன் இறுதி போட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
வெள்ளியன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிவிப்பின் கீழ் இரண்டு இந்தியர்களுக்கும் 50,000 டாலர்களுக்கான உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது, அதனை தொடர்நது இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர்.
🌍தொடர் வெயிலால் புலியருவியில் தண்ணீர் வரத்து நின்றது
தென்காசி : குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயிலடித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. புலியருவி வறண்டு விட்டது. மெயின், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசனில் பெரும்பாலான நாட்கள் சாரல் இல்லாமலேயே கழிந்து விட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலடித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறையத் துவங்கியது. மெயினருவியில் தண்ணீர் வெகுவாக குறைந்ததையடுத்து பாறைகளில் பாசி படர் ந்து காணப்படுகிறது. ஆண்கள் பகுதியில் மிதமாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் உள்ள 4 பிரிவுகளில் ஆண்கள் பகுதியில் பரவலாகவும், பெண்கள் பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவும் விழுகிறது.
பழைய குற்றாலத்திலும் குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். புலியருவியில் நேற்று காலையில் தண்ணீர் வரத்து நின்று விட்டது.
🌍மேற்கு வங்கத்தில் டெங்கு பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆனது
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வடக்கு 24 பர்கனாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் டெங்கு பாதித்து, என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இதனால், டெங்கு உயிரிழப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.
🌍பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது (படங்கள்)
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
🌍சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி பிரதமர் மோடிக்கு அழைப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்துள்ள சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி பிரதமர் மோடி சீனா வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
🌍மறைவுக்கு முன் கூட்டியே இரங்கல் தெரிவித்த திமுக
சென்னை : திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் இன்று அதிகாலை, உடல்நலக் குறைவால் காலமானார். இதனை முன்னிட்டு திமுக கழகம் இரங்கல் தெரிவித்து, கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.அதில், 13.08.2016 ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சற்குண பாண்டியன் மறைந்ததாகவும், இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புக்கள் அனைத்தும் கழக கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக 12.08.2016 தேதியிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
🌍சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.23,752-க்கு விற்பனை
🌍📡🌍📡🌍📡🌍📡📡🌍📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக