தமிழ்நாடு அரசு14 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு விருது அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு அரசு14 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு விருது அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்: 411 நாள் : 14.08.2016
செய்தி வெளியீடு
இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 14 காவல் துறை
அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு
முதலமைச்சரின் ஆணை
புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை
அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன்
பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன்
விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட, மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்:
1. திரு. எஸ்.அரவிந்த்,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு,
அயல் பணி,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,
சென்னை.

2. திரு. என்.சிலம்பரசன்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
திண்டிவனம் உட்கோட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
3. திரு. மா.விவேகானந்தன்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
உடுமலைப்பேட்டை உட்கோட்டம்,
திருப்பூர் மாவட்டம்.

4. திரு. மு. சோமசுந்தரம்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
வாழப்பாடி உட்கோட்டம்,
சேலம் மாவட்டம்.

5.திருமதி. எஸ்.ஸ்ரீமதி,
காவல் ஆய்வாளர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
திருப்பூர்.

6. திரு. டி. சரவணக்குமார்,
காவல் ஆய்வாளர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
இராமநாதபுரம் மாவட்டம்.
7.திரு.அ. தர்மலிங்கம்,
காவல் ஆய்வாளர்,
தனி பிரிவு,
விருதுநகர் மாவட்டம்.


8.திரு. த. ஜோதி,
காவல் ஆய்வாளர்,
தொடர் குற்ற குழு,
கோயம்புத்தூர் மாநகர்.
9. திருமதி.ரே. nஉறமலதா,
காவல் ஆய்வாளர்,
ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ,
திருச்சி மாவட்டம்.

இதே போன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக
செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு
அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக
முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள்:
1. திரு. ஜே.கே.திரிபாதி, இ.ஆ.ப.,
காவல்துறை கூடுதல் இயக்குநர்,
சட்டம் மற்றும் ஒழுங்கு, சென்னை.

2. திரு. என்.கே.செந்தாமரை கண்ணன், இ.ஆ.ப.,
காவல் துறை தலைவர்,
வடக்கு மண்டலம்,
சென்னை.

3. திரு. த.செந்தில் குமார், இ.ஆ.ப.,
காவல் துறை துணைத் தலைவர்,
தஞ்சாவூர் சரகம்.
4. திரு. ந.மா.மயில்வாகனன், இ.ஆ.ப.,
காவல் கண்காணிப்பாளர்,
திருவாரூர் மாவட்டம்.

5. திரு. சி.பாஸ்கர்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
கும்பகோணம் உட்கோட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன்
கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.
மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும்
சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

அபூர்வ வர்மா
அரசு முதன்மைச் செயலர்,
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை,
சென்னை – 9

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here