📻📡மாலை செய்திகள் 📡📻
📻📡17\08\ 16📡📻
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📻📡📻📡📻📡📻📡📻📡📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
📻நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால் வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாது என்பதால் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைத்துவிடுங்கள் என்று நிலக்கரி துறை முன்னாள் செயலர் குப்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📻டெல்லி அரசு பங்களாவில் வசித்து வரும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
📻மதவாதமும், மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது--திருமாவளவன்
📻ஆலோசனை கூட்டத்தின் போது துணை கலெக்டரை எம்.எல்.ஏ., கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
📻தில்லி ரயிலில் தவற விடப்பட்ட ரூ.93,000 இருந்த பணப்பையை, உரியவரிடம் ஒப்படைக்க நேர்மையாக பணியாற்றியதற்காக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் பூல் கன்வார் பாராட்டப்பட்டார்.
📻தமிழக ஆளுனர் ரோசய்யாவின் பதவிக் காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் அவருடைய பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
📻சட்ட சபையில் மேகதாதுவில் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.அந்தப்பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.எனவே சட்டப்பேரவையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
📻நாங்கள் நல்ல நிலைமையிலேயே உள்ளோம், உதவிக்கரம் நீட்டுகிறோம் என்று சொல்லி சங்கடப்படுத்த வேண்டாம் என நா. முத்துக்குமாரின் சகோதரர் ரமேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
📻திருட்டு வி.சி.டி.யைக் கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் தவறிவிட்டதாக சமீபத்தில் புகார் கூறியிருந்தார் நடிகர் விஷால்.
அவருடைய இந்தப் பேட்டிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் விஷாலுடைய படங்களுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என அச்சங்கம் தீர்மானம் நிறைவேறியுள்ளது
📻பெரும்பாலான செல்வந்தர்கள் வரி ஏய்ப்புக்காக மற்றொருவர் பெயரில் பினாமி சொத்துக்களை வாங்குவது வழக்கம்.
இது தொடர்பான புதிய சட்ட மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.
இச்சட்டத்தின்படி, பினாமி சொத்து வாங்குவோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறையும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும்
📻காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என சீனா கூறியுள்ளது
📻ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட உலக கலாச்சார திருவிழாவின் போது டில்லியில் யமுனை நதிக்கரை சேதப்படுத்தப்பட்டது உண்மை தான் என நிபுணர்கள் குழு, தேசிய பசுமை தீர்ப்பாய கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளது.
📻இந்தோனேஷிய கடல் பகுதியில் மலேசிய எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
📻சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
📻சேது சமுத்திர திட்டப் பணிகளின் போது ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை மாற்றியமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை, தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்திய ரயில்வே துறையிடம் அளித்துள்ளனர்
📻சாதனை படைக்கும் இந்தியர்களுக்கு 'ஈகோ'வும் அதிகமாக இருக்கிறது என இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
📻கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
📻இந்தியா முழுவதும் அனைத்து டோல்கேட்டிலும் பத்திரிக்கையார்களுக்கு
இனி கட்டணம் கிடையாது் அடையாள அட்டை கண்டிப்பாக இருந்தால் அனுமதிக்கபடும் -மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவு.
📻தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கு பதில் செல்லபாண்டியன் அவர்களும், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு பதில் வெல்லமண்டி நடராஜன் அவர்களையும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக கேஆர்பி.பிரபாகரன் நியமனம் - ஜெயலலிதா அறிவிப்பு.
📻மதுரை விளக்குத்தூண் அருகே போஸ்டர் அப்புறப்படுத்தக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம்.
📻சட்டசபையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திமுக உறுப்பினர்கள் தவறுதலாகப் பேசியிருக்கலாம் அவர்களுடைய இந்த நடவடிக்கைகளால் நான் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் இன்னும் சொல்லப்போனால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவும் தயாராக உள்ளேன் - முக ஸ்டாலின்.
📻மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ராஜரத்தினத்தை நியமித்தது தமிழக அரசு .
📻உத்தரப் பிரதேசத்தில் கனமழை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
📻வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் அலகு 3வது பிரிவில் 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்.
📻திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். துரிஞ்சிக்குப்பம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி இடைநீக்கம் செய்யப்பட்டார். சுதந்திர தினத்தன்று கொடியை தாமதமாக ஏற்றியதற்கு கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இரண்டு ஆசிரியர்கள் குடி போதையில் பள்ளிக்கு வந்ததால் கரிகாலம்பாடி பள்ளியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
📻மதன் வசூலித்த பல கோடி ரூபாய் யாரிடம் உள்ளது? நீதிபதிகள் கேள்வி
வேந்தர் மூவிஸ் மதன் மாணவர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய் யாரிடம் உள்ளது என்று சென்னை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதன் வசூலித்த பணம் தன்னிடம் உள்ளது என்று யாரேனும் ஒப்புக்கொண்டுள்ளனரா என்றும் கைது செய்யப்பட்ட மதன் கூட்டாளிகளிடம் முறையாக இதுவரை விசாரணை நடத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
📻வங்கி பணம் கொள்ளை குறித்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ஐ.ஜி ஆய்வு
வங்கிப் பணம் கொள்ளை போனது குறித்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ஐ.ஜி.மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்து வருகிறார். ரயில் நிலையத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.
📻26 வக்கீல்களின் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!
வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 126 வக்கீல்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.அவர்களின் சஸ்பெண்ட்டை நிறுத்தி வைக்க பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் உத்தரவிட்டார்.இந்த அறிவிப்பை வழக்கறிஞர் போராட்டக்குழு தலைவர் திருமலைராஜன் வரவேற்றுள்ளார்.
📻திண்டுக்கல் கல்லறைதோட்டம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் காலியாக உள்ள 2500க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பிட கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
📻சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட்
சட்டசபைக்கு இன்று வந்த 88 திமுக எம்.எல்.ஏ.க்களும் ஒருவாரம் சஸ்பெண்ட்
சட்டசபையில் இருந்து மு.க. ஸ்டாலின் சபை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
📻திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் சுமார் 6 மாத சிசு (குறை மாதத்தில் பிறந்த குழந்தை ) கிடந்தது.
📻தமிழக முதல்வர் சார்பில் திமுக-85, ஊடகங்கள்-55, விஜயகாந்த் உட்பட தேமுதிக-48 என மொத்தம் 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
213 அவதூறு வழக்குகள்
📻தமிழக முதல்வரை விமர்சித்ததாக
கூறி 2011-2016 வரை 213 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
📻📻📻📻📻📻📻📻📻📻📻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக