மதிய செய்திகள் 18/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 18/08/2016

💥💥மதிய செய்திகள் 💥💥

         💥💥18\08\16💥💥

💥💥💥💥💥💥💥💥💥💥💥

💥💥💥💥💥💥💥💥💥💥💥

💥குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை!

திருநெல்வேலி: குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


💥தாமிரவருணியைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தேவை: அன்புமணி ராமதாஸ்

தாமிரவருணியைப் பாதுகாக்க கட்சி சார்பற்ற மக்கள் இயக்கம் உருவாக வேண்டியது மிகவும் அவசியம் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி 

💥சிம்லாவில் கட்டிடம் இடிந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

சிம்லா: சிம்லாவில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

💥டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவு

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.66.86 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.66.76 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


💥சென்னை மழை சேதம்: தமிழகத்திற்கு உடனே நிதியளிக்க மத்திய அரசுக்கு நிலைக்குழு வலியுறுத்தல்!

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசு கோரிய நிதியை உடனே தாமதமின்றி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.



💥அரியானா அரசு அறிவிப்பு! சாக்ஷிக்கு 3 கோடி பரிசு!! மத்தியஅரசு 30லட்சம்!!

ரியோ ஒலிம்பிக் 58 கிலோ எடை பிரிவிலான பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடன் மோதிய மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் -ஐ 12-3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.

வெண்கலம் வென்ற இந்திய வீராஙக்னை சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஒலிம்பிக் பெற்ற வெற்றிக்காக சாக்ஷிக்கு அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்து உள்ளது.

மத்திய அரசும் ரூ.30 லட்சம் பரிசு அளித்து சாக்ஷியை கவுரவப்படுத்தி உள்ளது


💥செக் பவுன்ஸ்: முத்துக்குமார் குடும்பம் தயாரிப்பாளர்கள் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கித் தருகிறேன்

சென்னை: நா. முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.


💥தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று அதிரடி உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 ம், பார்வெள்ளி விலை ரூ.450 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2999 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.32070 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் ரூ.23,992 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.51 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.47,640 ஆகவும் உள்ளன.


💥மேகதாது அணை பிரச்சனைக்கு தமிழக அரசு

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் :விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை:

''தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைவதை அடுத்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கரமூர்த்தையை தமிழக ஆளுநராக நியமித்தால் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு சிக்கலான சூழ்நிலை உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல் காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடாததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட சுமார் 2500 கோடி நஷ்ட ஈட்டை தரக்கோரி, தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு தாக்கல் செய்த சூட் மனுவை சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா அடங்கிய அமர்வு, விசாரிப்பதற்கு தமிழக அரசு ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட தமிழக விவசாய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



💥அண்ணா பிறந்த நாளில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!: ராமதாஸ்


💥எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் : ஸ்டாலின் புகார்

சென்னை: தர்ணா போராட்டத்திற்கு பின்னர் சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் என குற்றம்சாட்டினார். 


💥மு.க ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழிசை கண்டனம்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு செல்ல ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு செல்ல அனுமதி மறுத்தது சரியான நடைமுறை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததே தவறு என்ற நிலையில் அனுமதி மறுப்பு நியாமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


💥12 ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது... : ஷாக்ஷி பெருமிதம்

ரியோ; ரியோ ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லையே என்ற வேதனையில் மூழ்கிய நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டதில் மகிழ்ச்சியடைவதாக ஷாக்ஷி மாலிக் பெருமிதம் தெரிவித்துள்ளார். மகளிருக்கான மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக் 2016-ல் இந்தியாவின் கணக்கை துவக்கி வைத்த ஷாக்ஷி , மக்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டதில் எல்லையில்லா ஆனந்தம் அடைவதாக கூறினார். 

மேலும் பேசிய அவர் தமது 12 ஆண்டுகால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்



💥டெல்லியில் 9 வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் பணம் பறிமுதல்

டெல்லி: டெல்லியில் உள்ள சாரை காலே கான் பகுதியில் நடந்த சோதனையில் 9 வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.



💥காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு: முதல்வர் ஜெ., அறிவிப்பு

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்படுமென முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு 2 நாளில் தொடரப்படும் என சட்டப்பேரவையில்முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


💥ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் லாவண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


💥கர்நாடகாவில் பசு மாடுகளை டெம்போவில் ஏற்றி சென்ற இரண்டு பேர் மீது தாக்குதல்

ஹெபிரி: கர்நாடகா மாநிலம் ஹெபிரி என்ற இடத்தில் இரண்டு பசு மாடுகளை டெம்போவில் ஏற்றி சென்ற இரண்டு பேரை இந்து ஜாக்ரன் வெடிக்கே ஆர்வலர்கள் அடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


💥ரூ.1 கோடியில் கட்டப்பட்டு திறப்புவிழா காணாத கட்டிடம் மரத்தடியில் நடக்குது வகுப்பறைகள்

* முனைவென்றி அரசு பள்ளியின் அவலம்

இளையான்குடி : முனைவென்றி அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்தின் திறப்பு விழா முடக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறைகள் மரத்தடியில் நடைபெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.




💥மாதவன் மீதான கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது!

மதுரை: நடிகர் மாதவன் மீதான கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கில், அவர் மீது தவறில்லை என்று நிரூபிக்கப்பட்டதால் முடித்து வைக்கப்பட்டது.

💥அடிப்படை வசதியைக்கூட செய்துதராத திண்டுக்கல்லுக்கு சிறந்த மாநகராட்சி விருதா?

பொதுமக்கள் அதிருப்தி

திண்டுக்கல் : குண்டும் குழியுமான சாலைகள், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், சாலையெங்கும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளில் சிக்கி திண்டுக்கல் பரிதவித்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல்லுக்கு சிறந்த மாநகராட்சி என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.




💥பீகாரில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

கோபால்கஞ்ச்: பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. . இந்நிலையில் கோபால்கஞ்ச் பகுதியில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான காள்ளச்சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



💥ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கத்தைப் பெற்றுத் தருவார் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் பி.வி.சிந்து தங்களுடைய சென்னை ஸ்மாஷர்ஸ் டீமில் விளையாடியவர் என்று பெருமிதம் கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்



💥ரியோ ஒலிம்பிக்: பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கிற்கு அன்புமணி வாழ்த்து




💥டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக் ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி!

டெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 18ம் தேதி (இன்று) ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பெண்கள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி பாசத்தை வெளிப்படுத்துவர். வடமாநிலங்களில் ரக் ஷா பந்தன் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். 

இதனை முன்னிட்டு ரக் ஷா பந்தன் விழாவை டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன், பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினர். அவருக்கு பள்ளிக்குழந்தைகள் ராக்கி கயிறு கட்டிவிட்டனர். மேலும் பல தலைவர்களும் ரக் ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.




💥சஸ்பெண்ட் ரத்து இல்லை: சபாநாயகர்

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என சபாநாயகர் தனபால் உறுதிபட தெரிவித்து விட்டார். நேற்றைய சட்டசபையில் ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 80 திமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து இன்று சபை முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.சட்டசபைக்கு சஸ்பெண்ட் செய்யப்படாத நேரு, பூங்கோதை, காந்தி, பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,மோகன், அன்பழகன், ராமச்சந்திரன், உள்ளிட்டோர் இன்று வந்தனர். திமுக உறுப்பினர்களும் , காங்., உறுப்பினர்களும் திமுக எம்எல்ஏ.,க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்த பின்னர் இந்த பிரச்சனையை எழுப்பலாம் என்றார். ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். திமுக உறுப்பினர்கள் அவையில் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஒருமையில் பேசுவது வாடிக்கையாகி விட்டது.

இதனால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறினார். 


💥கோர்ட் உத்தரவை மீறி பொது இடங்களில் 'ஊதுபவர்களால்' பொதுமக்களுக்கு இம்சை

* காவல்துறை கண்டுகொள்ளுமா?

மதுரை : கோர்ட் உத்தரவை மீறி மதுரையில் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




💥காஷ்மீரில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் கிரிவ் பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சமீர் அகமது மூங்கா (30) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.



💥கிளப்புகளில் அதிரடி சோதனை: சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

சென்னை: சென்னை கிளப்புகளில் போலீஸ் அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.6.5 செய்யப்பட்டது. மனமகிழ் மன்றம் என அனுமதி வாங்கிவிட்டு விடிய விடிய சூதாட்டம் நடத்தியதாக வந்த புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 2 சோதனை நடந்து உள்ளது. 



💥வெடிகுண்டு சந்தேகம்: தாய்லாந்தில் 15 பேருக்கு இராணுவ காவல்

பாங்காக்: தாய்லாந்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சந்தேகம் தொடர்பாக 15 பேர் இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




💥நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தருவையில் குடும்ப தகராறு காரணமாக ராஜசேகர் என்பவர் தனது 3 குழந்தைகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்து விட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி..


💥💥💥💥💥💥💥💥💥💥💥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here