2 மணி செய்திகள் 30/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2 மணி செய்திகள் 30/08/2016

www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📡📡📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴
ஜம்மு : பாக்., உளவு விமானம் இந்திய எல்லைக்குள் பறந்ததாக வந்த தகவலால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு

கிர்கிஸ்தானின் பிஷ்கேக்கிலுள்ள சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோரில் இருவர் கிர்கிஸ்தான் குடிமக்கள்.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட், பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவை இன்று சந்திக்கும் போது, குடியேறிகள் பிரான்ஸில் இருக்கும்போது ஜக்கிய ராஜ்யத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்கின்ற கருத்தை நிராகரிப்பார் என்று மூத்த பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க இவ்விரு அமைச்சர்களும் பாரிஸில் சந்திக்கின்றனர்.

ராணுவ பழுது பணிகள் மற்றும் மறு விநியோகம் ஆகியவற்றுக்காக, தங்களின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தமொன்றில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வரிகளை திரும்ப செலுத்த, தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் இன்று ஆணையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் செனட் அவையில், தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் இறுதி கட்ட விசாரணையில் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரேசில் அதிபர் ஜீல்மா ரூசெஃப், 12 மணி நேரத்துக்கும் மேலாக கடும் எதிர்ப்பு மிகுந்த குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார்.

இலங்கை வடமாகாணத்தின் முக்கிய உப்பளமாகிய ஆனையிறவு உப்பளத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக திங்கள்கிழமை உப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திருமணத்துக்கு பிறகு வன்கொடுமைக்கு உட்பட்டால் அது குற்றமாகாது என்று உள்துறை அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மேற்கோள் காட்டியுள்ளது. திருமணத்துக்கு பிறகு 15 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வன்கொடுமைக்கு உட்பட்டால் அது குற்றமில்லை என்று உள்துறை அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:-
குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தாலும், சமூகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைப்பெற்றுதான் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் நாட்டில் சமநிலை இல்லாததால் குழந்தை திருமணம் சமூகத்தில் ஒரு எதார்த்தமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஐபிசி பிரிவு 375இன் படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி வன்கொடுமையாகவே கருதப்படுகிறது. இருப்பினும் 2வது விதிவிலக்கின்படி 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் அவளுக்கு திருமணமான ஆண் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாக கருதப்படாது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படத்தை இயக்கினார் ரஞ்சித். இந்த திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டாலும், கலவையனா விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்-தமிழக மாநிலம் முழுவதும் நடைபெறும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள் சங்கத்துக்கு தமிழ்நாடு காஸ்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் மணல் லாரி தெரிவித்துள்ளனர்.காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் மற்றும் செண்ட்ரல் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.தஞ்சை, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியலில் ஈடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தினர் கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் மதுகுடிப்போர் பந்த்: கட்டிங் போட்டாலும், கர்நாடக சரக்கை போடாதே!

தமிழகம் முழுவதும் இன்று காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் தரமறுப்பதை கண்டித்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பந்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அந்த போஸ்டரில் கட்டிங் போட்டாலும் கர்நாடக சரக்கை போடாதே என்றும் விவசாயிகளுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக காவலி பய கிட்ட போய் சொல்லு நாங்க களமிறங்கிட்டோன்னு என்ற வாசங்கள் இடம் பெற்றுள்ளது.

69 கோடியை திருப்பி அளிக்கிறோம்; பச்சமுத்துவை விடுதலை செய்யுங்கள்: மகன் புதிய மனு-மருத்துவ சீட் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்ததாக எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்துவை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்த்துள்ளது. இவரின் ஜாமின் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவரது மகன் ரவி பச்சமுத்து புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், மருத்துவ சீட் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 69 கோடி ரூபாயை திருப்பி அளிக்க தயார் எனவும், பச்சமுத்துவை விடுதலை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட வாலிபர் உடல் கண்டெடுப்பு-நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வாலிபர் ஒருவர் நிர்வாணமாக பிணமாக கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு வாயில் வைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாழை தோட்டத்தில் இந்த வாலிபரின் உடல் நிர்வாணமாக கண்டுக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவர்கள் இறந்த வாலிபரின் உடலில் அவரது அணுறுப்பை அறுத்து வாயில் வைத்துள்ளனர்.இந்த கொலை கள்ள காதல் தொடர்பாக நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

இயக்குனர் விக்ரம் குமாருக்கு செப்டம்பர்-4 திருமணம்: காதலியை மணக்கிறார்

தமிழில் யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமாருக்கு வரும் செப்டம்பர் 4 திருமணம் நடக்கிறது. தனது காதலி ஸ்ரீநிதியை அவர் திருமணம் செய்கிறார்.

மழை பொழிய வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அசாம் மாநிலத்தில் வினோதமாக தவளைகளுக்கு திருமணம் நடத்தி வருண பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு போஸ்டர்: எம்.பியை காணவில்லை கண்டுபிடித்தால் பரிசு வழங்கப்படும்-பீகாரில் எம்.பி சவுத்திரி மெகபூப் படத்தை போட்டு இவரை காணவில்லை, கண்டுபிடித்தால் தந்தால் பரிசு வழங்கப்படும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அருண்விஜய் மதுபோதையில் காரை ஓட்டி போலீசார் ஜீப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதற்கு சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவிதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கதை கட்டி வருகின்றனர்.

திலீபன் தீவிரவாதியா? பகீர் தகவல்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் பல்வேறு கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திவந்தவர்கள் திலீபன் மற்றும் தமிழச்சி ஆகியோர். திலீபனை கைது செய்த காவல்துறை தற்போது தமிழச்சியையும் கைது செய்ய முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. திலீபன் ஏற்கனவே தேசிய கொடியை எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டவன். தற்போது சுவாதி வழக்கில் கருத்து தெரிவித்தும், ஆடியோ வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்திய திலீபனை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.திலிபனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல்களை சோதனை செய்ததில், திலீபன், மகி என்ற பெயரில் தமிழச்சியிடம் வாட்ஸ்அப்பில் பேசியதும், தீவிரவாதிகள் பலருடன் தொடர்பில் இருந்ததாக சமூக வலைதளங்களில் ஒருசிலர் பதிவிட்டு வருகின்றனர்.இதனையடுத்து சுவாதி கொலை வழக்கில் பல தகவல்களை வெளியிட்டதாலும், அதில் சிலரை குற்றவாளியாக கூறியதாலும், அவர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழச்சியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழச்சி தற்போது பிரான்ஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியை குறை கூறுவதில் மட்டுமே ஆம் ஆத்மி கவனம் செலுத்தி வருகிறது; மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் அதிருப்தி

கஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம்: விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இடைத்தரகர் சிபிஐக்கு கடிதம்

ஆதாயத்திற்காக காஷ்மீர் பிரச்சினையை சிறிய குழுக்கள் தூண்டி விடுகின்றன: மனோகர் பாரிக்கர் குற்றச்சாட்டு

தரை-வான்-கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்

5 ஆயிரம் மெட்ரிக் டன் தயாரிப்பு திறனுடன் உளுந்தூர்பேட்டையில் ரூ.82½ கோடியில் பாலிதீன் பிலிம் தொழிற்சாலை ஜெயலலிதா அறிவிப்பு

கெஜ்ரிவாலை போன்று டெல்லி துணை நிலை ஆளுநரும் ”420”: சுப்ரமணியன் சுவாமி சாடல்

இடஒதுக்கீடு பெற பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான உச்சவரம்பை உயர்த்த கருணாநிதி வலியுறுத்தல்

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் தாயார் புஷ்பம் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்குடன் வழக்கு சென்று கொண்டிருப்பதாக ராம்குமார் தாயார் புஷ்பம் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, தெலுங்கானா சட்டசபை ஒப்புதல் அளித்தது.

காவிரியில் கர்நாடக அரசு 57 டிம்சி தண்ணீரை திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா 57 டிம்சி தண்ணீரை திறந்து விட்டால் தான் தமிழகம் 7 டிம்சி தண்ணீரை புதுச்சேரிக்கு திறந்து விடும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி, சிறுவாணி பிரச்சனை தொடர்பாக அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாகன சோதனை குறித்து துரைமுருகன் கேள்வி

கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி விடுதலைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களை மறித்து போராட்டம் நடத்திய ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், த.பெ.தி.க., உள்ளிட்ட கட்சியை சேர்ந்த சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். காவிரியில் கர்நாடகா நீர் திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அஜி அணையில் நடைபெறும் சவுனி திட்டத்தின் முதல் கட்ட தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

னது முந்தைய உத்தரவுகளை அனைத்தையும் டெல்லி ஆளுநர் நஜீப் சிங் நிறுத்தி வைத்துள்ளார். அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவுகளை ஆளுநர் நஜீப் சிங் நிறுத்தி வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஊழியர் கைது

தமிழகத்திற்கு செல்ல வேண்டிய கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தம்

ம.பிரதேச மழை; கட்டடம் இடிந்து 2 பேர் பலி; 10 பேர் காயம்
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here