மதிய செய்திகள் 21/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 21/08/2016

📡🌏மதிய  செய்திகள் 🌏📡

            📡🌏21\08\16🌏📡

📡🌏📡🌏📡🌏📡🌏📡🌏📡

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📡ரத்தினங்குடி- புறத்தாக்குடி இடையே காட்டாற்றில் பாலம் அமைக்க வேண்டும்: தீவுப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை

லால்குடி: லால்குடி அருகே தீவு பகுதியாக காணப்படும் ரத்தினங்குடி மக்கள் வசதிக்காக காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியின் கடைக்கிராமம் ஆர்.வளவனூர் ஊராட்சியாகும். இவ்வூராட்சியில் நரிமேடு, ரத்தினங்குடி, ஆர்.வளவனூர் ஆகிய 3 கிராமங்கள் என 3 கிராமங்கள் உள்ளன. இந்த 3 கிராமங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஒவ்வொன்றும் நான்கு கி.மீ தொலைவில் உள்ளது. ஊராட்சியில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் ரோஜா, சம்மங்கி பூ பயிர் செய்து வருகின்றனர். மேலும் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினங்குடி கிராம மக்கள் ஒரு தீவில் இருப்பது போல் வசிக்கின்றனர்.


🌏புழல் சிறையில் இருந்து பிரபல ரவுடி செல்போனில் மிரட்டல்: போலீசில் நடிகை புகார்

சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, சென்னையைச் சேர்ந்த முனிவேல் என்பவரை காதலித்து வருகிறார். முனிவேல் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனால் முனிவேல் மனைவி காமாட்சிக்கும், ராதாவுக்கும் மோதல் நிலவுகிறது. இரு தரப்பு சார்பிலும் சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல காஞ்சிபுரம் ரவுடி வைரம் என்பவர், 18ஆம் தேதி மாலை செல்போன் மூலம் தன்னை மிரட்டியுள்ளார் என்று ராதா போலீசில் புகார் கொடுத்துள்ளார். 18ஆம் தேதி மாலை இந்த போன் வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே 8 வழக்குகளில் சிக்கியுள்ள வைரம் மீது கடந்த மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது.


📡கொட்டையூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி: போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை


🌏ஜல்லிக்கட்டு : பொன்.ராதாவை கிண்டல் செய்யும் ராமதாஸ்

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கலுக்கு நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் உறுதி அளித்திருந்தார். இதனை கிண்டல் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.


📡வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அரசாகவே அதிமுக அரசு உள்ளது: விஜயகாந்த்

சென்னை: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அரசாகவே அதிமுக அரசு உள்ளது. வேலை வாய்ப்பு இல்லாமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்


🌏அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை

சிதம்பரம்: சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ஊழியர் சுரேஷ் கடலூர் சென்றிருந்தபோது கொள்ளையர் கைவரிசைக் காட்டியுள்ளனர்.

📡திருமங்கலம் அருகே ரிசர்வ் வங்கி பணத்துடன் வந்த கன்டெய்னர் லாரி பழுது

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று நடுவழியில் பழுதாகி நின்று கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணத்தை மைசூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லும் வழியில் லாரி பழுதடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பழுதான கன்டெய்னர் லாரிக்கு திருமங்கலம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

🌏நாமக்கல் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.3.60 ஆக நிர்ணயம்.



📡இந்தியா சிமெண்ட்ஸ் டி.என். பிரீமீயர் லீக்  போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்   விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள கவுன்டர்களிலும், திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கு என்.பி.ஆர். கல்லூரியின் திண்டுக்கல் அலுவலகத்திலும் பொதுமக்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன . நெரிசலை தவிர்க்கும் வகையில், புக்மைஷோ (www.bookmyshow.com) இணையதளம் வாயிலாகவும் டி.என்.பிரீமியர் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



🌏செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு தனி
‘முகநூல்’ தமிழக அரசு அறிமுகம்!!

ஞாயிறு, ஆகஸ்ட் 21,2016, சென்னை,தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு தனியாக ‘முகநூல்’ கணக்கை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து அந்தத்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களின் முன்னேற்றமும், வளர்ச்சியும் பெருமளவில் உள்ளன. அதில் முகநூல் என அழைக்கப்படும் ‘பேஸ்புக்’கும் உள்ளது.அரசின் அனைத்து செயல்பாடுகளும் உடனுக்குடன் மக்களைச் சென்றடையும் வகையில், முதல்–அமைச்சரின் அறிவிப்புகள், மக்கள்நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை உடனே ‘பேஸ்புக்’கில் பதிவிட்டு வெளியிட செய்தி மக்கள் தொடர்புத்துறை நடவடிக்கைஎடுத்துள்ளது.அதன்படி, TN DIPR என்ற முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டு அதன்வழியாக அரசின் பணிகள் குறித்தும், முதல்–அமைச்சரின் அறிவிப்புகளையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்தத் துறை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


📡இஎஸ்ஐ மருந்தகங்கள் மருத்துவமனையாக மாற்றப்படும்: மத்திய அமைச்சர் பேட்டி!!

கோவை: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சுமார் 40 கோடி எண்ணிக்கையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட வகைகளில்இவர்கள் உள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ‘யூவின் கார்டு’ வசதி என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இஎஸ்ஐ வசதியை நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த யூவின் கார்டு வசதி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.தமிழ்நாட்டில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் மூலம் 29 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போது 216 மருந்தகங்கள் உள்ளன. இதில் 64 மருந்தகங்கள் சொந்த கட்டடத்தில்செயல்படுகிறது. மீதமுள்ள மருந்தகங்களுக்கும் விரைவில் சொந்த கட்டடம் கட்டப்படும். ரூ.200 கோடி மதிப்பீட்டில் 22 மருந்தகங்கள், 10 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஆம்பூர், தாம்பரம், கோவில்பட்டி, ராஜபாளையம், விருதுநகர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள மருந்தகங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு பண்டாருதத்தாத்ரேயா கூறினார்.


🌏கொடைக்கானலில்
இருந்து பழனி சென்ற டாட்டா ஏசி  வாகனம் மலைச்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. தீயில் கருகி வாகன ஓட்டுனர் பலி .



📡ஒலிம்பிக்கில் தோற்றாலும் டுவிட்டர் யுத்தத்தில் கரோலினா மரினை வென்ற பிவி சிந்து!

ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் தங்கத்தை தவறவிட்ட போதும் டுவிட்டர் யுத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் நம்பர்1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினாவிடம், கடுமையாக போராடி தோல்வியடைந்தார்.


🌏மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாநில அரசுகள் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி

நாட்டின் கூட்டாட்சி அமைப்பை அழிக்கும் விதமாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.


📡மர்ம காய்ச்சலால் 4 குழந்தைகள் உயிரிழப்பு: ஆறுதல் கூற சென்ற அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள்

மர்ம காய்ச்சலால் 4 குழந்தைகள் உயிரிழப்பு: ஆறுதல் கூற சென்ற அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள்

திருவள்ளுர் அருகே மர்ம காய்ச்சலால் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் கிராமத்திற்கு சென்று சுகாதார சீர்கேடுகளை சரிசெய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் குழந்தைகள் இறந்த கிராமமான காவேரிராசபுரத்திற்கு சென்றனர்.

அங்கு அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சரை சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அழுது புலம்பினார்கள்.


🌏பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சீர்காழி: சீர்காழி அருகே மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் கோமதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஷீலா, ஒன்றிய கவுன்சிலர் பாலசுந்தரி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் திருமுருகன் வரவேற்றார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் வழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணி சென்றனர். மேலும் வீடுவீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


📡ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு

சென்னை : தலைமை செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் மீது சென்னை கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


🌏திருப்பதியில் அதிகாலை தரிசனம் செய்தார் இலங்கை அதிபர் சிறிசேனா

திருப்பதி: திருப்பதியில் அதிகாலை தரிசனம் செய்த சிறிசேனா கார் ஓட்டுநர் வருகைக்காக 10 நிமிடம் காத்திருந்தததால் போலீஸ் மற்றும் தேவாஸ்தான அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இலங்கையில் சிறிசேன அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையடுத்து திருப்பதியில் அதிபர் சிறிசேனா இன்று அதிகாலை தரிசனம் உத்யோகத்தில் செய்தார். 

📡ஈசா மையத்தின் முறைகேடுகளை நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்!: ஜ.மா.ச. தலைவர் உ.வாசுகி


🌏செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ராதா புகார்

சென்னை: சிறையில் இருந்து செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ராதா நடித்துள்ளார். நடிகை ராதாவை ரவுடி வைரம் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது. நடிகை ராதாவின் காதல் விவகாரத்தில் ரவுடி வைரம் தலையிடுவதாக கூற்றம் சாட்டியுள்ளார்.



📡இன்றுடன் நிறைவடைகிறது ரியோ ஒலிம்பிக்

ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 3 ம் தேதியன்று துவங்கிய 31வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் (ஆகஸ்ட் 21) நிறைவடைகிறது. ஆகஸ்ட் 3ம் தேதியன்று கோலாகலமாக துவங்கிய ரியோ ஒலிம்பிக் போட்டியில் 207 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா தரப்பில் 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ரியோ ஒலிம்பிக்கில் 15 க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்திய நேரப்படி நாளை காலை 4.30 மணிக்கு மரக்கானா மைதானத்தில் நிறைவு விழா நடைபெற உள்ளது.ரியோ ஒலிம்பிக் போட்டியில் 43 தங்கம் உள்ளிட்ட 116 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

27 தங்கம் உள்ளிட்ட 66 பதக்கங்களுடன் பிரிட்டன் 2வது இடத்திலும், 26 தங்கம் உள்ளிட்ட 70 பதக்கங்களுடன் சீனா 3வது இடத்திலும் உள்ளன. பதக்க பட்டியலில், ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களுடன் இந்தியா 66வது இடத்தில் உள்ளது. 


🌏கடையம் அருகே சிலைகள் மீட்பில் திருப்பம்: அத்திரிமலைக்கு எடுத்துச்சென்ற ஸ்தபதிகள் ஆற்றில் வீசியது அம்பலம்

கடையம்: கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் மந்தியூர் செல்லும் சாலையில் ராமநதியின் குறுக்கே உள்ள இரண்டாற்று பாலத்தின் கீழ் முட்புதரில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒன்றரை அடி உயரத்தில் கல்லால் செய்யப்பட்ட சிவன், நந்தி சிலைகள் கிடந்தன. கடையம் எஸ்ஐ ஸ்தேவான் சேகர் மற்றும் போலீசார் அங்கு சென்று சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்தன.



📡ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து நாசம்: 2 குழந்தைகள் காயமின்றி மீட்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. இதில், சிக்கிக்கொண்ட 2 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர். 


🌏காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தர் பகுதியில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்பகுதியில் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


📡துருக்கி :திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு; 22 பேர் பலி,90 பேர் படுகாயம்

துருக்கி நாட்டின் காஷியான்டெப் நகரில் நடந்த திருமண விழாவின் போது நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நகர கவர்னர் தெரிவித்துள்ளார். துருக்கி அரசு இதை பயங்கரவாத தாக்குதலாகவே இதை பார்க்கிறது. காஷியான்டெப் நகரம் சிரியா எல்லைப்பகுதியிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு குர்திஷ் இனத்தவர்களே அதிகம் வசிக்கிறார்கள். இங்கு நடந்த திருமண விழாவில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 90 க்கும் மேலானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி அரசு பாதுகாப்பு பணிகளை முடுக்கியுள்ளது.

🌏செம்மரம் வெட்ட ஆந்திராவுக்கு வருபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்: ஆந்திர வனத்துறை அமைச்சர் பேட்டி

செம்மரம் வெட்டவோ, கடத்தவோ ஆந்திராவுக்கு வருபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி திருப்பதியில் பேட்டியளித்துள்ளார். செம்மரக் வெட்டுவதற்காக ஆந்திராவுக்கு வருபவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.


📡கார் நிலை தடுமாறி விபத்து புது மாப்பிள்ளை பலி
சென்னை-திருவள்ளூர் மாவட்டம்,வெங்கட்டாபுரத்தை சேர்ந்தவர் சுமன்(33).இவர் பக்ரைன் நாட்டில் சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்துள்ளார்.அதே நிறுவனத்தில் பணிபுரியும் பிந்து என்ற பெண்ணை கடந்த 10தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கும்பகோணம் அருகேயுள்ள சனீஸ்வரன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக தனது மனைவி மற்றும் தாய்,தந்தையருடன் காரில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள தென்னவநல்லூர் கிராமத்தினருகேவந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறியதில் பேருந்து நிழற்குடையில் மோதியது.இதனால் நிழற்குடை சுவர் கார்மீது விழுந்ததில் பலத்த காயங்களுடன் 4பேரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது ஆபத்தான நிலையிலிருந்த சுமன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சுமனின் மனைவி மற்றும் தாய்,தந்தையர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி.இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. திருமணமான பத்தே நாட்களில் சாஃப்ட்வேர் இஞ்சினியர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🌏சத்தீஸ்கரில் சந்தை பகுதியில் குண்டுவெடிப்பு: சிஆர்பிஎப் வீரர் படுகாயம்

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் சந்தை பகுதியில் குண்டுவெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📡"புதுச்சேரியை விட்டு வெளியேறி விடுவேன்" - கிரண்பேடி

புதுச்சேரியை தூய்மையாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் தான் புதுச்சேரியை விட்டு வெளியேறி விடுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, புதுச்சேரியை தூய்மையாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே புதுச்சேரியை தூய்மையானதாக மாற்ற முடியும். குப்பைகளை அள்ளுவது துணைநிலை ஆளுனரின் பணி அல்ல. புதுச்சேரியை தூய்மையாக மாற்றும் பணியில் மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை எனில் புதுச்சேரியை விட்டு வெளியேறி விடுவேன். அக்டோபருக்குள் புதுச்சேரியை தூய்மையானதாக மாற்றாவிட்டால் புதுச்சேரியை விட்டு சென்று விடுவேன் என தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


🌏மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி தலைமை செயலக வளாகத்தில் போட்டி சட்டசபை நடத்திய விவகாரம்
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 60 எம்எல்ஏக்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு


📡சிந்து எனது 
கவனத்தை கலைக்க பார்த்தார் ..தங்கம் வென்ற மரின் ' 
குற்றச்சாட்டு


🌏வெள்ளி மங்கை 
சிந்து யாருக்கு சொந்தம் ?அடித்துக் கொள்ளும் ஆந்திரா , தெலுங்கானா


🌏சர்ச்சைக்குரிய சமூக 
ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது 4 பிரிவுகளில் போலீஸ் 
வழக்கு


🌏எல்லாம் சிந்து எஃபெக்ட் .. 
கிரிக்கெட் வீரர்
அஸ்வினுக்கு மகளை 
பேட்மின்டன் வீராங்கனையாக்கதான் ஆசையாம் !


🌏7.5 கோடி பேருக்கு 
தொழுநோய் பரிசோதனை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்



🌏நாளை காவல் துறை 
மானியம் : புதியஅறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல்வர்


🌏மதுராந்தகத்தை 
அடுத்த அச்சிறுப்பாக்கத்தில்
அரசின் குடியுரிமை இல்லாமல் , படித்து வந்த இலங்கை அகதிகளின் 55 
குழந்தைகள் பள்ளிகளில் இருந்து 
வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர்


🌏ஓணம் பண்டிகை 
நாளில் இணையத்தில் மதுவிற்பனை : 
திட்டத்தை கைவிட்டது கேரளம்


🌏பிராட்பேண்ட் 
இணையதளத்தின்
குறைந்தபட்ச வேகத்தை 
4 மடங்கு உயர்த்தமத்திய அரசு முடிவு

🌏உள்கட்சிப் பூசல்கள் 
காரணமாக கேரளகாங்கிரஸ் 
வலுவிழக்கிறது : 
ஏ . கே .அந்தோணி



🌏பிற மாநிலங்களில் 
இருந்து வரும்காய்கறிகளின் 
வரத்து அதிகரித்துள்ளதால்
சென்னையில் காய்கறிகளின் விலைகடுமையாக வீழ்ச்சி 
அடைந்துள்ளது .

🌏கோயம்பேடு காய்கறி 
சந்தையில் தக்காளிவிலை மிக கடுமையாக சரிந்து கிலோ ரூ .3க்கு விற்கப்படுகிறது .

🌏சிங்கப்பூருக்கு கடத்த 
முயன்ற 22 கிலோமயில் இறகுகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்



🌏மும்பை - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில்இறந்து போன பயணியின் பையில் ரூ .99லட்சம் பணம்


🌏 பாகிஸ்தான் ' தீவிரவாதிகளை உருவாக்கும்தொழிற்சாலை ; எங்களுக்கு இந்தியாவின்உதவி தேவை ; பலுசிஸ்தான் அகதி மஸ்தாக்பேட்டி


🌏காஷ்மீர் பள்ளத்தாக்கு
 பகுதியில்போஸ்ட்பெய்டு மொபைல் டெலிபோன்சேவைகள் செயல்பட தொடங்கின


🌏காவிரி விவகாரத்தில் 
சட்டப்பூர்வமானதீர்வையே காண வேண்டும் : வெங்கையாநாயுடு


🌏டெல்லியில் 
கொள்ளையர்களால்
சுட்டுக்கொல்லப்பட்ட காவலர்
குடும்பத்திற்கு1 கோடி
நிவாரணம் அறிவித்தது 
டெல்லி அரசு

🌏ஐ . எஸ் அமைப்புக்கு 
தகவல் பரிமாற்றம் : 2.5லட்சம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம் !

📡🌏📡🌏📡🌏📡🌏📡🌏📡🌏''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here